எப்படியெல்லாமோ
வர்ணித்து விட்டனர் அதை...
மழை என்று சொன்னாலே போதுமே
மனதுக்குள் பெய்யுமே!
இந்த மழைக்குத் தெரியவில்லை
எப்போது பெய்ய வேண்டுமென்று...
ஆனால் அது எப்போது பெய்தாலும்
சூழ்நிலை மறந்து ரசிக்க
மனதுக்குத் தெரிகிறது!
நீருக்கு ஏங்கும் வறண்ட நிலம்
விக்கல் எடுக்கும் மரங்கள்
வருவதைப் பிடிக்க
வைத்துள்ள பாத்திரங்கள்.
வழிந்தோடும் வாகன மேற்கூரைகள்
வடிந்து வீணாகும் தார்ச்சாலைகள்...
என எல்லா இடத்திலும்
ஒரு போல பெய்யும் மழை
அன்பை எப்படிப் பொழிவது
என்பதைச் சொல்ல வருகிறதோ!
எத்தனையோ மணித்துளிகள்
தொடர்ந்து பெய்தாலும்
சில மனங்களை மட்டும்
ஈரமாக்க முடியவில்லை
அடை மழையால்!
மழை பெய்கிற பொழுதுகளில்
மட்டுமே தெரிகிறது
விரிந்து பரந்த அவர்கள்
ஆகாயக் கூரையில்
எத்தனை பொத்தல்கள் என்று
பிளாட்பாரவாசிகளுக்கு!
பூமியின் கோபத்தை
மழையால் ஒத்தியெடுத்து
ஆற்றியது ஆகாயம்!
ஆகாயத்துக்கு
வாழ்க்கைப்பட்ட நீர்
ஆசையுடன் பார்க்க வந்தது
பிறந்த வீட்டை!
உனக்கும் எனக்கும் இடையே
ஒவ்வொன்றாய் விழும்
மழைத் துளிகளினூடே
புகுந்து புறப்பட்டு
உன்னைச் சென்றடைந்த
என் எண்ணங்களை
உலர்த்தி எடுத்துக்கொள்!
உன் மேல் பட்ட துளியும்
என் மேல் பட்ட துளியும்
எங்கோ ஒன்றாகி
கடலில் கலந்து
மறுபடி எழுந்து மேகமாகி
என்றோ பொழியும்
நாம் சேர்ந்திருக்கும்போது
நம் மீது ஒன்றாக!
<><><>
( 'வார மலர் ' 27-11-2011இதழில் வெளியானது )
19 comments:
மழையெனப் பொழிந்திருக்கும் கவிதைகள் யாவும் அந்த மழையைப் போலவே அழகு.
மழைக்குள் மழையெனப் பொழிந்துவிட்டீர்கள் கவிதையாக. அருமை.
பூமியின் கோபத்தை
மழையால் ஒத்தியெடுத்து
ஆற்றியது ஆகாயம்!
கவிதை மழையில் ஆனந்தமாய் நனைந்தேன்..
தங்கள் மழைக் கவிதை எங்கள் மனங்களிலும்
ஒரு இதமான நெகிழ்சியான் உணர்வை
விதைத்துப் போகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3
அடடா மழைடா அடை மழைடா..
பூமியின் கோபத்தை
மழையால் ஒத்தியெடுத்து
ஆற்றியது ஆகாயம்!
என்ன வார்த்தை ஜாலம்.
அன்பை எப்படிப் பொழிவது
என்பதைச் சொல்ல வருகிறதோ!
சில மனங்களை மட்டும்
ஈரமாக்க முடியவில்லை
அடை மழையால்!
unmai unmai........... ennathan malaiena polinthalum ....
arumayana varthaigal
கவிதை மழையில் நாங்களும் நனைந்தோம்....
நல்ல கவிதைத் துளிகள்....
superb... cong.,
///எத்தனையோ மணித்துளிகள்
தொடர்ந்து பெய்தாலும்
சில மனங்களை மட்டும்
ஈரமாக்க முடியவில்லை
அடை மழையால்!///
எனக்குப் பிடித்த முத்தான வரிகள்.
எல்லா இடத்திலும்
ஒரு போல பெய்யும் மழை
அன்பை எப்படிப் பொழிவது
என்பதைச் சொல்ல வருகிறதோ!//
மழைக்கவிதைகள் அனைத்தும் மிக அழகு... மழை போலவே!
தங்கள் கவிதைச் சாரலில் நனைந்து பரவசப்பட்டோம் .......மழையைப் போல!
மழையில் நனையும் சுகம் கவிதை வாசிப்பிலும். எத்தனை மழை வந்தாலும் இன்னும் மழை கேட்கும் குழந்தை போல இன்னும் இன்னும் மழைக்கவிதைகளுக்காக ஏங்குகிறது மனம். பாராட்டுகள்.
உன் மேல் பட்ட துளியும்
என் மேல் பட்ட துளியும்
எங்கோ ஒன்றாகி
கடலில் கலந்து
மறுபடி எழுந்து மேகமாகி
என்றோ பொழியும்
நாம் சேர்ந்திருக்கும்போது
நம் மீது ஒன்றாக!
கவிதையின் அடர்த்தி
இங்கு மிளிர்கிறது
வாழ்த்துக்கள்
இந்த மழைக்குத் தெரியவில்லை
எப்போது பெய்ய வேண்டுமென்று...
ஆனால் அது எப்போது பெய்தாலும்
சூழ்நிலை மறந்து ரசிக்க
மனதுக்குத் தெரிகிறது!//
இந்த கவிதை முழுமையும் நன்றாக இருக்கிறது.
எனக்கு மழையை ரசிக்கப் பிடிக்கும். அதனால் இதை மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன்
நடை பாதையில் வசிக்கும் மனிதர்கள் மழைக் காலத்தில் வானத்தின் பொத்தல்களை நினைப்பது மனதை நெகிழ செய்கிறது.
தங்கள் ‘மழை’யில் நனைந்தேன்...”
மழை எப்போது பெய்தாலும் சூழ்நிலை மறந்து ரசிக்க மனதுக்குத் தெரிகிறது. என் மனதும் இப்படியே. மிக ரசித்துப் படித்தேன் உங்கள் கவிதையை. வாழ்த்துக்களும் நன்றியும் ஜனா சார்!
good one!! :)
பலருக்கு கவிதை மழையாய் பொழியும். உங்களுக்கு மழையே கவிதையாய் பொழிகிறது. ஒன்பது கவிதைகளும் சிப்பிக்குள் விழுந்த மழைத்துளி. :)
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!