Saturday, December 10, 2011

தீபம்







ளியில் 
ஒளிந்திருக்கும் பெரு 
வெளியில் சஞ்சரிக்கிறேன்  .
எங்கும் பிரகாசமாக. 
எல்லாம் ஒன்றாக.
எதுவும் மகிழ்ச்சியாக.

கார்த்திகை திருநாள் மனதின் 
கார்மேகம் கனிந்து 
உள்ளுக்குள்ளும் 
பொழிகிறது மழை. 

தீபங்களின் நடுவே 
தீவாக நின்று துதிப்பது 
வேறெதிலும் கிடைத்திராத 
தீராத சந்தோஷம். 

தீபத்தால் ஆராதனை 
செய்கிறோம். இன்று 
தீபத்தை ஆராதிக்கிறோம்.

<><><>



9 comments:

குறையொன்றுமில்லை. said...

கார்த்திகைத்திரு நாள் பற்றிய கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

Rekha raghavan said...

//தீபத்தை ஆராதிக்கிறோம்.//

கூடவே உங்கள் தீப ஒளியலங்காரக் கவிதையையும்.

மனோ சாமிநாதன் said...

//மனதின்
கார்மேகம் கனிந்து
உள்ளுக்குள்ளும்
பொழிகிறது மழை. //

அருமையான வரிகள்!!

ADHI VENKAT said...

அழகான தீபக் கவிதை ஜொலிக்கிறது.

கீதமஞ்சரி said...

தீபாராதனை போற்றி அழகிய கவியாராதனை. பாராட்டுகள்.

ரிஷபன் said...

தீபங்களின் நடுவே
தீவாக நின்று துதிப்பது
வேறெதிலும் கிடைத்திராத
தீராத சந்தோஷம்.

சந்தோஷம் எப்போதும்.. உங்கள் கவிதை வாசிப்பிலும்.

Yaathoramani.blogspot.com said...

தீபங்களின் நடுவே
தீவாக நின்று துதிப்பது
வேறெதிலும் கிடைத்திராத
தீராத சந்தோஷம் //.


அருமையான சிந்தனை
அழகான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து
த.ம 1

கோமதி அரசு said...

ஒளியில்
ஒளிந்திருக்கும் பெரு
வெளியில் சஞ்சரிக்கிறேன் .
எங்கும் பிரகாசமாக.
எல்லாம் ஒன்றாக.
எதுவும் மகிழ்ச்சியாக.//

மகிழ்ச்சி ஒளி எங்கும் நிறைந்து இருக்கட்டும்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!