Tuesday, December 6, 2011

திறப்பு விழா




திறப்பு விழா இனிதே முடிந்தது.


பஜாரில் ஏகாம்பரத்தின் புதிய கடை பளிச்சென்றிருந்தது.

கடையைத் திறந்து வைத்தவர் பக்கத்துக் கடைக்காரர். வந்திருந்த அன்பர்கள் கை தட்ட, எல்லாருக்கும் இனிப்பு வழங்கினார் ஏகாம்பரம்.

கோபமாக வந்த அவர் மகன் இரைந்தான். ''என்னப்பா இது? ஒரு பெரிய புள்ளியை வெச்சு நம்ம கடையைத் திறக்கணும்னு ஒரு லிஸ்ட்டே வெச்சிருந்தேன். நீங்க என்னடான்னா, அவங்க எல்லாரையும் விட்டுட்டு பக்கத்துக் கடைக்காரரை வெச்சுத் திறந்து... இப்படிப் பண்ணிட்டீங்களே?''

''எல்லாம் சரியான காரணத்தோடு தான்,'' என்றார் ஏகாம்பரம் பொறுமையாக, ''யோசிச்சுப்பாரு, திறந்து வைக்கிறவங்க இன்னிக்கு வருவாங்க, நாளைக்குப் போயிடுவாங்க. பக்கத்துக் கடைக்காரர் என்னிக்கும் நம்மகூட இருக்கிறவர். அதான் அவரை வெச்சுத் திறக்க வைத்தேன்.''  

(குமுதம் 11-04-2007 இதழில் வெளியானது)





21 comments:

Rekha raghavan said...

ஒரு பக்கக் கதைன்னா எப்படி இருக்கணும்னு எங்கள் அறிவுக் கண்களை திறந்து வைத்த உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மனதைக் கவ்வும் கதை.பாராட்டுகள்.

வெங்கட் நாகராஜ் said...

சரியான கண்ணோட்டம் ஏகாம்பரத்திற்கு....

அதை அருமையான ஒரு பக்கக் கதையாகக் கொடுக்க உங்களால் தான் முடியும்...

நாங்கள் உங்களிடம் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

கோமதி அரசு said...

அண்டை வீட்டுக்காரர், பக்கத்து கடைக்காரர்கள் உடன் தான் நாம் முதலில் நல்ல நட்புறவுடன் இருக்க வேண்டும்.

அனுபவம் தரும் பாடம் அது.

ஏகாபரத்தின் மகனுக்கு அனுபவம் போக போக தானே வரும்.

நல்ல கதை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஏகாம்பரமா கொக்கா! அவர் செய்தது சரியே! அக்கம் பக்கத்தவர் தான் நம்முடன் கடைசிவரை இருப்பவர்கள். அவர்களுடன் நட்புடன் இருப்பதே நல்லது. நாம் திறந்து வைத்த கடை நல்லபடியாக லாபகரமாக ஓட வேண்டும் என அவரும் நினைத்து, தொடர்ந்து ஒத்துழைப்பும், ஊக்கமும் தருவார். vgk

ரிஷபன் said...

நான் நினைச்சேன் ரேகாராகவன் ஸார் சொல்லிட்டார்..
குட்டியாய் நச்சென்று கதை சொல்லும் திறமை உங்களிடம் அழுத்தமாய் பதிந்திருக்கிறது.

RVS said...

ஜனா சார்! இரத்தினச் சுருக்கமா கதை சொல்றதுல நீங்க பலே ஆள் சார்! :-)

கே. பி. ஜனா... said...

Padma Herur says
கதை நல்லா இருக்கு

கே. பி. ஜனா... said...

@ரேகா ராகவன்:தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@வை. கோபால கிருஷ்ணன்:தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@கோமதி அரசு:தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@வெங்கட் நாகராஜ்:தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@R V S :தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@ரிஷபன்:தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

குறையொன்றுமில்லை. said...

இவ்வளவு சுருக்கமா எவ்வளவு அழகா சொல்லிட்டீங்க. நல்லா இருக்கு.

கே. பி. ஜனா... said...

@Lakshmi: தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

Bagavath Kumar.A.Rtn. said...

சுருக்கமாகவும், அழகாகவும், கதை சொல்லிருக்கும் பாங்கு அற்ப்புதம். அடுத்த வீட்டுக்கரனே என்றைக்கும் நல்ல நண்பன். அவன் உதவி எப்பொழுதும் தேவை என்பதை அனுபவத்தோடு அப்பா மகனுக்கு சொல்லிருப்பது அழகு. சின்ன கதையில் நல்ல கருத்து. - பகவத் குமார்.

கீதமஞ்சரி said...

நல்லதொரு கருத்தை நச்சென்று நயம்பட எடுத்துச் சொல்லும் கதை. பாராட்டுகள்.

ADHI VENKAT said...

ரத்தின சுருக்கமா ஒரு அழகான கதை. ரொம்ப நல்லா இருக்கு சார்.

Yaathoramani.blogspot.com said...

கடைக்காரரின் முடிவு மிகச் சரி
அருகில் இருப்பவர்களின் தயவோடு இருப்பதுவே மிகச் சரி
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 12

Yaathoramani.blogspot.com said...

கடைக்காரரின் முடிவு மிகச் சரி
அருகில் இருப்பவர்களின் தயவோடு இருப்பதுவே மிகச் சரி
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 7

கே. பி. ஜனா... said...

@Bagavath Kumar :தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@கோவை to தில்லி:தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@கீதா : தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@Ramani: தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

Suganthan said...

நல்ல strategy.

கே. பி. ஜனா... said...

Padma Herur writes:

கதை நல்ல இருக்கு

CS. Mohan Kumar said...

இவ்வளவு சுருக்கமான வரிகளில் இவ்வளவு அருமையான கதையா? வாழ்த்துகள் சார்

கே. பி. ஜனா... said...

@மோகன்குமார்: தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

ஹேமா said...

சின்னதாய் அழகாய் மனதில் படியும்படி சொல்லியிருக்கிறீர்கள் !

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!