Sunday, November 20, 2011

நாயகி



''ஸாரி சுமி, இன்னிக்கு ஆபீசில லேட் ஆயிட்டுது.  இன்னிக்கு சினிமாவுக்குப் போக முடியாது போல இருக்கு...'' என்றபடியே வந்தான் சேகர்.


''இது உங்களுக்கே நல்லாயிருக்கா? தவறாம ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி ரெடியா இருன்னு சொல்ல வேண்டியது. அப்புறம் லேட்டாயிடுச்சு, வா, அப்படியே பக்கத்துல பீச்சுக்குப் போயிட்டு வரலாம்னு சமாளிக்கிறது.... அப்புறம் இந்த போலி அழைப்பெல்லாம் தேவையா?'' படபடவென்று பொரிந்து தள்ளி விட்டாள்.

ஒரு நிமிடம் பரிதாபமாக விழித்தான் அவன்.

''சரி, உண்மையான காரணத்தை சொல்லிடறேன். 'சினிமாவுக்குப் புறப்பட்டு இரு'ன்னா நீ நல்லா டிரஸ் பண்ணிட்டு அலங்கரிச்சிட்டு இருப்பே.  பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கும்.  ஆபீசிலும் வெளியிலும் பொண்ணுங்க நல்லா அலங்கரிச்சிட்டு அழகாக காட்சியளிக்கிறதைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும்போது உன்னையும் அப்படி அழகு படுத்திப் பார்க்கத் தோன்றித்தான் இப்படி...''

''ஒரு நிமிஷம் இருங்க, இதோ புறப்பட்டு வர்றேன், பீச்சுக்கே போகலாம்!'' என்றாள் அவள்.

(குமுதம் 9 -4 -2008 இதழில் வெளியானது.)

14 comments:

Rekha raghavan said...

மனைவியை அழகுன்னு கணவன் சொன்னா அது அழகு. இந்தக் கதையும் அழகு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான கதை. vgk

மனோ சாமிநாதன் said...

ஒரு பக்கக் கதைதான் என்றாலும் மனைவியிடம் கணவனின் அன்பை வெளிப்படுத்தும் விதம் சிறப்பாக இருக்கிறது!

ADHI VENKAT said...

உங்களோட கதை ரொம்பவே அழகா இருக்கு சார்.

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப யதார்த்தமா கதை சொல்லிட்டீங்க நல்லா இருக்கு.

ரிஷபன் said...

நேற்றுதான் நீயா நானா வில் மேக்கப் பற்றி உரையாடல் பார்த்தேன்.
அது என்னவோ தெரியவில்லை.. வீட்டில் அழுது வடியும் சிலர் வெளியே போகணும் என்றால் ஏகத்துக்கு மேக்கப் போட்டுக் கொள்கிறார்கள்.
சைகாலஜியும் கலந்த கதை.. மேக்கப் இல்லாமல் அசல்
கருத்துடன்.

வெங்கட் நாகராஜ் said...

அழகான கதை....

ஹ ர ணி said...

வணக்கம் ஜனா. உங்களைத் தொடர்ந்து வாசிக்கிறேன். ஏன் பத்திரிக்கைகளில் காணோம்? உங்கள் முகவரியைத் தாருஙக்ள் என்னுடைய புத்தகத்தை அனுப்பவேண்டும (சிறுகதைத் தொகுப்பு /ஒருபக்கக் கதைகள்)

அப்பாதுரை said...

:)

G.M Balasubramaniam said...

நறுக்கென்று அழகான ஒரு சிறு கதை.

கோமதி அரசு said...

'சரி, உண்மையான காரணத்தை சொல்லிடறேன். 'சினிமாவுக்குப் புறப்பட்டு இரு'ன்னா நீ நல்லா டிரஸ் பண்ணிட்டு அலங்கரிச்சிட்டு இருப்பே. பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கும். ஆபீசிலும் வெளியிலும் பொண்ணுங்க நல்லா அலங்கரிச்சிட்டு அழகாக காட்சியளிக்கிறதைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும்போது உன்னையும் அப்படி அழகு படுத்திப் பார்க்கத் தோன்றித்தான் இப்படி...''//

அழகான வார்த்தைகளால் மனைவியின் கோபத்தை மாற்றி மனைவியே பீச்சுக்கு அழைப்பது போல் கதையை முடித்து இருப்பது அருமை.

rajamelaiyur said...

அழகான சிறுகதை


இன்று

நடிகர் விஜய் : நேற்று ! இன்று !! நாளை ?

கே. பி. ஜனா... said...

@ரேகா ராகவன்:தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@வை. கோபால கிருஷ்ணன்:தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@மனோ சாமிநாதன்:தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@கோவை to தில்லி:தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@Lakshmi: தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@வெங்கட் நாகராஜ்:தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@ஹரணி: தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@கோமதி அரசு:தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@என் ராஜபாட்டை ராஜா:தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@G.M.Balasubramaniam:தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

ராமலக்ஷ்மி said...

அருமை:)!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!