Monday, November 14, 2011

அது வரை மட்டும்!


அது வரை மட்டும் 

எங்கோ ஒரு அசைவு
ஏதோ ஒரு சொல்
என்னுள் ஓர்  எழுச்சியை
ஏற்படுத்துகிறது சட்டென்று!
அதைத்தேடி நான்
அலைகிறேன், தவிக்கிறேன்...
அது வரை என் துக்கத்தை 
அடக்கிக் கொள்ள முடிந்தால் 
அதுவே போதும்!





இத்தனை தானா?

எப்படியோ மறு நாள்
சமாதானமாகி விடுகிறது
மனம்.
அல்லது அதற்கு மறு நாள்.
ஆனால் முதல் நாள்
அது படுத்தும் பாடு!
ஏற்றுக்கொள்ள
படும் சிரமமோ அது?
ஏற்றுக் கொண்டபின்
தோன்றுகிறது:
'இத்தனை தானா இது?'


12 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஏற்றுக் கொண்ட பின்
தோன்றுகிறது:
இத்தனை தானா இது....

நல்ல வரிகள்...

இத்தனை தான் என்று புரிந்து கொள்ளத்தான் நேரமாகிறது...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அது [கிட்டும்] வரை மட்டும் ஆவல்,
கிட்டிவிட்டால் இத்தனை தானா அது.

அருமையான பதிவு.

ரிஷபன் said...

எங்கோ ஒரு அசைவு
ஏதோ ஒரு சொல்

அதற்கான தவிப்பும் தேடலும்தானே வாழ்க்கை..
வாழ்க்கைச் சித்திரம் கன ஜோர்

குமரி எஸ். நீலகண்டன் said...

ஆறுகிறது துக்கம் அவ்வளவு சீக்கிரம்... நல்லப் பதிவு

ADHI VENKAT said...

அருமையான வரிகள்.

குறையொன்றுமில்லை. said...

எப்படியோ மறு நாள்
சமாதானமாகி விடுகிறது
மனம்.
அல்லது அதற்கு மறு நாள்.
ஆனால் முதல் நாள்
அது படுத்தும் பாடு!
ஏற்றுக்கொள்ள
படும் சிரமமோ அது?
ஏற்றுக் கொண்டபின்
தோன்றுகிறது:
'இத்தனை தானா இது?'

ஆமா உண்மைதான்

கீதமஞ்சரி said...

இன்பமோ துன்பமோ எதையும் 'இதுவும் கடந்து போகும்' என்னும் உணர்வோடு ஏற்றுக்கொண்டால் எதுவும் எளிதாய்க் கடந்து போகுமாம். அந்த உணர்வு எழுவதுதில்தானே இருக்கிறது சூட்சுமம்.

ஆறுதல் தேடியலையும் மனத்தையும் ஆறியபின்னான மனத்தையும் அழகாய்ப் படம்பிடித்துக் காட்டுகிறது கவிதை.

Yaathoramani.blogspot.com said...

அருமையான சிந்தனை அருமையான பதிவு
இது அனவருக்கும் தோன்றும் உணர்வுதான்
ஆயினும் எத்தனைபேரால் இதை மிக்ச்
சரியாக சொல்லிப் போக முடிகிறது
மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்
த.ம 4

vimalanperali said...

வாஸ்தவம்தான்.அசைவும் சொல்லும் ஏற்படுத்தும் அசைவுகள் சமூகத்தில் நிறைய,நிறையவே/

ஷைலஜா said...

எல்லார்க்கும் வர உணர்வுதான் அழகாய் கவிதையில் சொல்லி இருக்கீங்க ஜனா.

Rekha raghavan said...

"அது வரை மட்டும்" அசைவும், சொல்லும் "இத்தனை தானா" மனசும் படித்தேன் ருசித்தேன் மலைத்தேன்.

G.M Balasubramaniam said...

காலம் எல்லாக் கவலைகளையும் அடித்துக்கொண்டு போய்விடும். மறதி போற்றுவோம் என்ற என் பதிவைப் படித்துப் பாருங்களேன்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!