Friday, November 4, 2011

நலம் வாழ...


டுத்த வாரம் பிறந்த நாள் மைதிலிக்கு.  என்ன பரிசு வாங்குவது என் இனிய மனைவிக்கு?  மண்டையை உடைத்துக் கொண்டேன்.

வாட்ச்? ஏற்கெனவே ரெண்டு இருக்கு. செல் போன்? காமிரா? எல்லாமே இருக்கு.  இருக்கிற வசதிக்கு எது  வாங்கிக் கொடுத்தாலும் அசர வைக்காது மைதிலியை.

புதுசா, உருப்படியா, மறக்க முடியாததாக...

அவள் ஷெல்ஃபைக் குடைந்தேன்.  ஆ, கிடைத்தது ஐடியா!

பிறந்த நாள் அன்று...

வாசலில் பைக் வந்து நிற்க, ''அய் வசந்தி! பார்த்து எத்தனை வருஷமாச்சு! எப்படிக் கண்டு பிடிச்சே என் அட்ரசை?  பிறந்த நாளும் அதுவுமா டாண்ணு வந்து நிற்கிறியே!  என்னங்க, இவள் தான் ஹைஸ்கூலில் என் டியர் சிநேகிதி.  அப்புறம் சந்திக்கவே முடியலே...''  சந்தோஷத்தில் பரபரத்தாள் இவள்.

''நான் எங்கே கண்டு பிடிச்சேன்? எல்லாம் உன் கணவர் ஏற்பாடு தான்!'' என்றாள் வசந்தி.

என் பக்கம் திரும்பினாள் மைதிலி. ''மறக்க முடியாத பரிசுதான்!''

('குமுதம்' 11-06-2008 இதழில் வெளியானது )   

16 comments:

ராமலக்ஷ்மி said...

உயர்ந்த பரிசு:)! நல்ல கதை.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சுருக்கமாய் ஒரு ரத்னம்.

குமரி எஸ். நீலகண்டன் said...

நல்லப் பரிசு

வை.கோபாலகிருஷ்ணன் said...

பிறந்த நாள் அன்று தன் ஆருயிர்த்தோழியை நேரில் சந்திப்பதை விட ஒரு பெரிய பரிசா என நினைப்பவள் தான் மனைவி என்ற மர்மத்தை அறிந்துள்ளவருக்குப் பாராட்டுக்கள். vgk

குறையொன்றுமில்லை. said...

சுருக்கமா அழ்கான கவிதை வடிவில் ஒரு சிறு கதை ரொம்ப அழகு

ரிஷபன் said...

அருமையான பரிசு.
என் நண்பன் குமாரும் இதே போல என்னைப் பார்க்க நேர்ந்தால் எவ்வளவு ஆனந்தம்..

மனோ சாமிநாதன் said...

மனைவி மீதுள்ள‌ அன்பை இதை விட அழகாக வெளீப்படுத்த முடியாது! சிற‌ப்பான கதை!

Suganthan said...

புதுசா, உருப்படியா, மறக்க முடியாத ஐடியா!

ஷைலஜா said...

இதைவிட பரிசென்ன வேணும்? கதையை எங்கவீட்டில் படிக்கசொல்றேன்!!

வெங்கட் நாகராஜ் said...

பரிசுப் பொருட்களை விட நிச்சயம் இது ஒரு பெரிய பரிசு...

நல்ல சிறுகதை...

Rekha raghavan said...

இந்தக் கதையே எங்களுக்கு ஒரு மறக்க முடியாத பரிசுதான்!

கே. பி. ஜனா... said...

Chandra Manoharan:
parisu kadhai padithen,jana. viththiyaasamaana parisuthan.nanri

புதுவை சந்திரஹரி said...

அன்பு ஜனா, நல்ல கதை. மனைவிக்கு
சிறந்த பரிசு. - சந்திரஹரி

புதுவை சந்திரஹரி said...

அன்பு ஜனா, நல்ல கதை. மனைவிக்கு
சிறந்த பரிசு. - சந்திரஹரி

nilaamaghal said...

எதிர்பாரா ம‌கிழ்ச்சி எதிர்பார்க்கும் ம‌ன‌சு. வித்தியாச‌மாக‌ ப‌ரிச‌ளிக்க‌ விரும்புப‌வ‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ குறிப்பு.

க.பாலாசி said...

ரொம்ப நல்லாருக்குங்க...

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!