வினாடிகள் பொன்னானவை
அதை புரிந்து கொண்ட
வினாடியை அவனால் மறக்கவியலாது.
கண் முன் நிகழ்ந்தது அது.
லாரி மீது மோதி
எகிறித் தெறித்த பைக்கிலிருந்து
இடம் பெயர்ந்து முகம் பேர்ந்து
அந்த வாலிபன்...
ஓடிச் சென்று தூக்கி
ஆட்டோவில் ஏற்றி...
உதவிடலாமா...?
தயங்கி நின்ற இரு வினாடிகளில்
தட்டிச் சென்றார் அந்த வாய்ப்பை
ஒரு வயோதிகர்.
15 comments:
//வினாடிகள் பொன்னானவை
அதை புரிந்து கொண்ட
வினாடியை அவனால் மறக்கவியலாது.//
காலத்தின் அருமையை நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி விளக்கிய உங்களை என்னால் மறக்கவியலாது.
சூப்பர்! அந்த ஒரு வினாடியைத்தான் Golden Moment என்று அவசர சிகிச்சை மருத்துவர்கள் சொல்கிறார்கள். நச்சென்று ஒரு கவிதை.
காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது.
நன்றே செய், அதுவும் இன்றே செய், அதுவும் இப்போதே உடனே செய் என்பது தெளிவாகியது. vgk
தயங்கி நின்ற இரு வினாடிகளில்
தட்டிச் சென்றார் அந்த வாய்ப்பை
ஒரு வயோதிகர்.
காலம் யாருக்காகவும் காத்திருக்காது
கவிதை மிகவும் கூர்மையாக உள்ளது. சொல்லவந்த விஷயம் தெளிவாக வெளிவந்துள்ளது! வாழ்த்துக்கள்!!
ஒரு மின்னல் இடைவெளியில் காலம் எத்தனை பொன் போன்றது என்பதை அழகாய்ச் சொல்லி விட்டீர்கள்!
காலம் பொன் போன்றதுதான்.
சில வரிகளே ஆனாலும் மிகவும் உண்மையானதோர் விஷயம்! வாய்ப்பு யாருக்காகவும் காத்திருப்பதில்லை.
சுருக்கமாக சொன்னாலும்
நறுக்கென்று சொல்லி விட்டீர்கள்.
காலம் யாருக்காகவும்
காத்திருக்காது என்று......
வாய்ப்பு. ஆம் தவறவிட்டால் வராது. மிக அருமையான கவிதை.
காலத்தினால் செய்த உதவி ஞாலத்தின் மாணப் பெரிது. யார் உபயோகப் படுத்தினால் என்ன,?வாய்ப்பு உணர்ந்து கொள்ளப் பட்டால் சரி.
நல்ல கவிதை! கடந்த வினாடிகள் என்ன செய்தாலும் திரும்பக்கிடைக்காது!
ஆம்...காலம் யாருக்காகவும் காத்திருக்காது!
தயங்கி நின்ற இரு வினாடிகளில்
தட்டிச் சென்றார் அந்த வாய்ப்பை
ஒரு வயோதிகர்.
புரிந்து கொண்ட பொன்காலம்!
ஒரு சம்பவத்தை கவிதையாக்கி விட்டீர்கள். கண் முன் விரிகிறது அந்த சம்பவம் !
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!