Tuesday, September 13, 2011

மோதிரக் கை


''என்ன டைரக்டர் சார், உங்க குருநாதர் டைரக்டர் மாசிலாமணி இப்படி கமென்ட் அடிச்சிருக்கார் உங்க லேட்டஸ்ட் படத்தை?'' ஓடி வந்தான் அசிஸ்டன்ட் டைரக்டர் பழநி.
''என்ன, என்ன சொல்லியிருக்கார் என் மூணாவது படத்தை?'' ஆவல் பொங்கிற்று டைரக்டர் சுகந்தனுக்கு.
''காட்சிகளை  இன்னும் விறுவிறுப்பாய் இப்படி இப்படி அமைத்திருக்க வேண்டும்னு எழுதி ஒரு குட்டு வெச்சிருக்கார் பாருங்க.''
''அப்படியா, சபாஷ்!'' துள்ளிக் குதித்தார் சுகந்தன்.
இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''என்னங்க இது, உங்க முதல் படத்துக்கு கமென்ட் சொல்றப்போ பளிச்சென்று நல்லாயிருக்குன்னு ஒரே வார்த்தையில் சொன்னார். ஆனா நீங்களோ அவ்வளவுதான் சொன்னாரான்னு குறைப்பட்டுக்கிட்டீங்க.''
''எஸ்!''
''ரெண்டாவது படத்துக்கும் அதையே தான் சொன்னார். அப்பவும் நீங்க மூஞ்சியைத் தூக்கி வெச்சிட்டு அவ்வளவுதான் சொன்னாரான்னு கேட்டீங்க.''
''ஞாபகமிருக்கு.''
''இப்ப இந்தப் படத்தை இன்னும் நல்லா எடுத்திருக்கலாம்னு கமென்ட் கொடுத்திருக்கார். இதுக்குப் போய் துள்ளிக் குதிக்கிறீங்களே?''
''ஆமா, ரொம்ப சந்தோஷப்படறேன்.  உடனே போன் போட்டு அவருக்கு சொல்லணும்,'' என்றார் முகம் மலர.
இன்னமும் விளங்காமல் விழித்துக் கொண்டிருந்த பழநிக்கு விளக்கினார், ''மடையா, என் குருநாதர் சொல்லுவார், எந்த நல்ல படமுமே நூறு பெர்சன்ட் சரியா வராது. அதிலும் இம்ப்ரூவ் பண்ண வழியிருக்கும்பாரு. ஸோ அப்படி என் படத்தை  அவர் சொன்னால் நல்லா வந்திருக்குன்னு தானே அர்த்தம்? எந்த சஜெஷனும் கொடுக்கலேன்னா வெத்துப் படம்னு அர்த்தம்.  அதான் எனக்கு இப்ப சந்தோஷமாயிருக்கு, புரியுதா?"                 


12 comments:

மாலதி said...

உண்மையில் மிகசரியான அமைப்பு தேர்ந்த ஒருவரின் விமர்சனம் இப்படிதான் இருக்கும் இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் பதுதான் ஒருவர் வெற்றி பெற முடியம் பாராட்டுகள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை.... விமர்சனம் என்றாலே நிறை - குறை இரண்டுமே இருக்கவேண்டும் என்பது உண்மை...

ADHI VENKAT said...

பொருத்தமான தலைப்பு.நல்ல கதை சார்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பொருத்தமான தலைப்பு. நல்ல கதை.

முன்னேறத் துடிப்பவர்கள், தங்களை மேலும் மெருகூட்டிக்கொள்ள விரும்புபவர்கள், இது போன்று மோதிரக்கையால் குட்டுப்படவே விரும்புவார்கள்.vgk

Rekha raghavan said...

அட இப்படி ஒரு கோணம் இருக்கோ? மாத்தி யோசிங்கறது இதைத்தானோ?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட...பிரமாதம் சார்...

ராமலக்ஷ்மி said...

விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்பதை அருமையாகச் சொல்லுகிறது கதை. தலைப்பும் நன்று.

Unknown said...

ஆஹா புரிஞ்சது நன்றி!

ரிஷபன் said...

இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்.. :)

குறையொன்றுமில்லை. said...

அதான் விமரிசனம் என்றால் குறை நிறை இரண்டையும் சுட்டிக்காட்டனும் தான். அதுதான் நடு
நிலையான விமரிசனமாக இருக்க முடியும்.

தக்குடு said...

அடுத்த போஸ்ட் எப்ப போடபோறீங்க சார்?? :)

இராஜராஜேஸ்வரி said...

இம்ப்ரூவ் பண்ண வழியிருக்கும் பகிர்வு..

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!