''கண்ணன், மாதவன் ரெண்டு பேர்ல ஒருத்தரைத்தான் நான் இந்த ப்ராஜெக்ட் லீடர் வேலைக்குத் தேர்ந்தெடுக்கணும், '' என்ற எம்.டி. பரசுராம் தன் மேனேஜரின் முகத்தைப் பார்த்தார்.
''ஒ.கே.''
''உங்க அபிப்பிராயம் என்ன, முதல்ல கண்ணனைப் பத்திச் சொல்லுங்க.''
''நல்ல திறமைசாலி. எம்.பி.ஏ. பிளஸ் எம்.எஸ். ஐம்பதுக்கு மேல பிராஜக்டில அனுபவம் .
''குட்.''
''அது மட்டுமில்லே. இது வரை எந்த ஐடியா கேட்டும் என்கிட்டே வந்ததில்லே. என்னப்பா உனக்கு சந்தேகமே வராதான்னு நானே அசந்து போய்க் கேட்டேன். நெவர்னு சிரிச்சுக்கிட்டே சொல்வான்...''
''ஒ.கே. மாதவன் எப்படி?''
''திறமை சாலி தான் அவரும். எம்.பி. ஏ. பிளஸ் எம்.எஸ். ஐம்பது சொச்சம் பிராஜக்ட்ஸ்...''
''கோ ஆன்.''
''ஆனால் ஒரு விஷயம். ஏதாவது சின்ன சின்ன தவறு பண்ணிட்டு வந்து ஆலோசனை கேட்பார்.''
கண்ணனையே தேர்ந்தெடுப்பார் என்று எதிர்பார்த்தார். ஆனால் பரசுராமோ, ''ஒ.கே, மாதவனையே போட்டுருங்க,'' என்றார்.
''சார்?''
''பாருங்க, பிராஜெக்ட் லீடர் வேலையில் இருக்கிறவங்க திறமையானவர்களாக இருக்கிறது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் நம்பகமானவர்களாக இருப்பதும். தானே செயல் படுகிறவர்களை விட தவறு செய்தாலும் நம்மகிட்டே யோசனை கேட்டு செய்யறவங்க தான் நம்பகமானவங்க.''
''உண்மைதான் சார்,'' என்றார் அவரின் நுண்ணறிவை வியந்தபடி.
7 comments:
interesting..... :-)
நல்ல பதிவு.
'பாருங்க, பிராஜெக்ட் லீடர் வேலையில் இருக்கிறவங்க திறமையானவர்களாக இருக்கிறது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் நம்பகமானவர்களாக இருப்பதும். தானே செயல் படுகிறவர்களை விட தவறு செய்தாலும் நம்மகிட்டே யோசனை கேட்டு செய்யறவங்க தான் நம்பகமானவங்க.''
''உண்மைதான் சார்
நல்ல கதை. [ஆனால் சும்மா எதற்கெடுத்தாலும் சின்னச்சின்ன சந்தேகங்களும், யோசனைகளும் கேட்டுக்கொண்டே இருப்பவர்களைக் கண்டால் சில சமயம் சிலருக்கு எரிச்சல் வருவதும் உண்டு]
நல்ல முடிவு தான் எடுத்திருக்கிறார்.
நல்ல கதை.... தான் தவறே செய்வதில்லை என்று சொல்பவரை விட தவறு செய்தாலும் யோசனை கேட்பவர் நல்லவர்...
அப்படியா சொல்றீங்க..
தானே செயல்பட்டாலும் தவறு செய்தாலும் அதைச் சரி செய்து கொள்ளும் திறமையும் இருந்தால் அவர்தானே சிறந்தவர்?
ஹ்ம்ம் யோசிக்க வைக்கும் முடிவு ...
என் மெயில் ஐடி என் ப்ரோபைளில் உள்ளது . ஒரு மடல் அனுப்புங்களேன்
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!