Tuesday, December 1, 2009

பிரிவின் அர்த்தங்கள்...



எல்லாம் முடிந்த பின்

எழுத என்ன இருக்கிறது?

அன்பின் மணிகா...

விதியின் முன்

செயலற்றுப் போய்

நிற்கிறது வாழ்க்கை.

என்றாலும்

அந்த விதியினுடையது போல

உன் எழுத்தும்

நிற்கிறது உறுதியாய்.

அந்த எழுத்தில் வாழ்கிறாய்.

அந்த ஜீவிதத்துக்கு அழிவில்லை.



என்றோ ஒரு நாள்

ஏதோ ஒரு ஜென்மத்தில்

நம் சந்திப்பு நிகழலாம்.

அதுவரை காத்திருக்கும்

பொறுமையைத் தானே

உன்னிடம் கற்றுக்கொண்டேன்?

அப்போது என்னை நீ

அடையாளம் கண்டு கொள்ள,

விட்டுப் போயிருக்கிறாய் ஒர்

ஜென்ம வாசனை.

அது உன்

அன்பின் சாதனை...



(சமீபத்தில் காலம் தழுவிக் கொண்ட எழுத்தாளர் 'மணிகா' மறக்க முடியாத நண்பர். விகடன்,குமுதம்,கல்கி,வாரமலர்,தேவியில் சிறுகதைகள், 'கண்மணி'யில் நாவல்கள் 'அமுதம்' இதழில் கட்டுரைத் தொடர் என நிறைய எழுதியவர். அவரின் நினைவாக...)

7 comments:

நிலாரசிகன் said...

நல்லதொரு கவிதாஞ்சலி

Rekha raghavan said...

மணிகாவின் கதைகளை வாசித்திருக்கிறேன். நாகர்கோவிலுக்கு பலமுறை வந்திருந்தும் அவரை சந்திக்காமலே போய்விட்டது என்னுடைய துரதிர்ஷ்டம் . ஒரு நல்ல எழுத்தாள நண்பரை இழந்துவிட்டோம். அவருக்கான நினைவுக் கவிதை உள்ளத்தை உலுக்கியது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.

ரேகா ராகவன்.

ungalrasigan.blogspot.com said...

மணிகா என்ற பெயரை நான் கேள்விப்பட்டதில்லை. என்றாலும், அவர் நினைவாக தாங்கள் எழுதிய அஞ்சலிக் கவிதை கண்ணீர் வரவழைப்பதாக இருந்தது.

ரிஷபன் said...

மணிகா.. உன் சாதனைகளுக்காக ஆனந்தக் கண்ணீர் சிந்த நாங்கள் காத்திருந்தோம்.. இன்றோ உன் பிரிவால்.. இன்னொரு பிறவி உண்டு என்றே நம்ப விரும்புகிறேன்.. உன்னைச் சந்திக்கவாவது..

creativemani said...

நல்லதொரு கவிதாஞ்சலி!!!

Unknown said...

I read your kavithai you have written about ur friend MANIGA.It expressed your close association with him.
Anbudan,
N.ChithambaraThanu

Unknown said...

Dear jana,
Iread your kavithai about MANIKA YOUR close friend.Iam really thrilled about words
N.ChidambaraThanu

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!