Friday, December 11, 2009

தனிமை





மெல்லச் சுவரேறிக் குதித்த ரங்கன், பைப்பைப் பிடித்து மாடி ஜன்னலுக்கு ஏறினான். ஜன்னலைப் பற்றிக்கொண்டு கவனித்தான். பேச்சுக் குரல் கேட்டதும் திடுக்கிட்டான்.

என்ன இது? 'அந்தப் பொண்ணு மட்டும் தான் தனியா இருப்பா. கணவன் வெளிநாட்டில். மாமனார், மாமியார் ஊருக்குப் போயிருக்காங்க'ன்னு அடித்துச் சொல்லியிருந்தானே துரை? அப்புறம் எப்படி...? கூர்ந்து கேட்டான்.

''ஹாய் ப்ரீத்தி, அப்பவே வந்து காத்திட்டிருக்கேன். எங்கே போனே?''

''சமைச்சிட்டிருந்தேன்.''

''வாவ்! இந்த சிவப்பு சுடிதாரைப் பார்த்தா எனக்கு என்னென்னவோ தோணுது.''

''தோணட்டும். ஆனா இப்ப உங்களால ஒண்ணும் பண்ண முடியாது.''

''ஓஹோ? அப்படீன்னா ஏன் இந்த மாதிரி சூப்பர் டிரெஸ்ஸா போட்டு எனக்குக் காட்டறே?''

''பார்த்து ரசிக்கத்தான்!''

கேட்டுக் கொண்டிருந்த ரங்கன் மெதுவாகப் பின் வாங்கி பைப்பில் இறங்கினான், ஏமாற்றத்துடன்.

மாடியில்...
வெப்காம் ஆன் செய்து நெட்டில் கணவனிடம் பேசிக் கொண்டிருந்த ப்ரீத்தி, விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தாள்.


('குமுதம்' 8-10-2008 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை.)

9 comments:

ungalrasigan.blogspot.com said...

குமுதம் இதழிலேயே இதைப் படித்து ரசித்திருக்கிறேன். டெக்னாலஜி முன்னேற்றத்தை ஒரு பக்கக் கதையில் அழகாக நுழைத்திருக்கிறீர்கள்.

கிருபாநந்தினி said...

நறுக்குனு காட்பரீஸ் சாக்லெட் கடிச்ச மாதிரி இருக்கு கதை!

பூங்குன்றன்.வே said...

இணையத்தை நல்லதுக்கும் பயன்படுத்தமுடியும் என்பதை சொல்வது போல் உள்ளது இது.
ஒரு பக்கத்தில் இனிய கதை !

கலையரசன் said...

சுருக்கமா.. ஆனா, நச்சுன்னு இருக்கு ஜனா!!

ரிஷபன் said...

ஒரு பக்கக் கதை ஸ்பெஷலிஸ்ட்!

CS. Mohan Kumar said...

//ஒரு பக்கக் கதை ஸ்பெஷலிஸ்ட்!//கரெக்டு!!


ரெண்டு நிமிஷத்தில் ஏதோ நினைக்க வைத்து பின் எப்படியோ முடிக்கிறாரே!!

aazhimazhai said...

சின்ன கதை .... ரொம்ப நல்ல இருந்தது

Rekha raghavan said...

முடிவை முதலிலேயே ஊகிக்க முடியாமல் செய்து விட்ட ஒரு பக்கக் கதை அமர்க்களமாக இருக்கு.

ரேகா ராகவன்

பின்னோக்கி said...

நல்ல ட்விஸ்ட் கதை

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!