ம்.. அவசரம் அவசரம்...
நான் பாடி முடிக்க வேண்டும்.
ஆம்.
மனிதர்கள் விழித்துக்கொண்டு விடுமுன்
நான் முடித்தாக வேண்டும்
இந்தக் காலைக் கச்சேரியை.
அவர்கள் விழித்துவிட்டால்
சந்தோஷமாய்ப் பாடும் என்னைக் கண்டு விட்டால்
உடனே என்னைத் தங்கள்
சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் அவர்களுக்கு.
ஆம்.
சந்தோஷமான எதையும் அவர்களுக்குச்
சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
சொந்தமாக்கிக் கொண்டுவிட்டபின்
எப்படி அதனிடம்
சந்தோஷம் இருக்க முடியும்
என்றறிய மாட்டார்.
-- கே. பி. ஜனார்த்தனன்
( 02-04-1987 குமுதத்தில் வெளியான என் கவிதை )
8 comments:
Very nice...
//மனிதர்கள் விழித்துக்கொண்டு விடுமுன்
நான் முடித்தாக வேண்டும்//
நல்ல சிந்தனை. அருமையான சொல்லாடல். மொத்தத்தில் தூள் கிளப்பிட்டீங்க.
ரேகா ராகவன்.
"சந்தோஷமான எதையும் அவர்களுக்குச்
சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்."
நல்ல கவிதை. ஒரு பறவைக்குக்கூட தெரிந்து விட்டது மனிதன் இப்படித்தான் இருப்பான் என்று.
என்றென்றும் அன்புடன்
வெங்கட், புது தில்லி
ஒரு பெண்ணின் மன உணர்வுகளைப் பிரதிபலிக்கும் உருவகக் கவிதை போல் இது எனக்குத் தோன்றுகிறது. அருமை!
நன்றாகவுள்ளது..
//சந்தோஷமான எதையும் அவர்களுக்குச்
சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
சொந்தமாக்கிக் கொண்டுவிட்டபின்
எப்படி அதனிடம்
சந்தோஷம் இருக்க முடியும் //
மனசுக்குள் என்னவோ செய்கிறது
Ms anu,
திரு. ராகவன்,
திரு. வெங்கடராமன்,
திரு. ரவி பிரகாஷ்,
முனைவர் குணசீலன்,
திரு. ரிஷபன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அட, மனிதனின் வக்கிர எண்ணங்களை பறவைகள் எப்படி x ray எடுத்தன?
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!