Tuesday, April 21, 2026

அவன் குரல்... (30 Second Story)


“கடவுளே, வரம் வேண்டாம், உங்களுக்கு நனறி சொல்லணும்! நான் உங்களைப் பார்க்கணும்!”
வதங்கினான்.
வந்தார். "வரம் கேக்காம நன்றின்னு வந்தது நீ மட்டும்தான். அதான் காட்சி தந்தேன். சொல்லு. எதுக்கு நன்றி?"
"எத்தனையோ பிரசினை எனக்கு. ஆனா ஒவ்வொண்ணு வரும்போதும் எனக்கு உங்க அசரீரி கேட்குது. அதுபடி நடக்குது. நான் நார்மலாயிடறேன்."
"அசரீரியா? நான் எப்ப .."
"பிரசினை சமயத்தில ரோட்டில போறவங்க பேச்சோ, தூரத்தில கேட்கிற பாட்டு வரியோ, எதிரில ஒரு இடத்தில தெரியற வாசகமோ.. அது எனக்கு நான் என்ன செய்யணும்னு சொல்லுது. என் மேல கருணை வெச்சு நீங்க.."
"நில்லு நில்லு... அதிலெல்லாம் என் ஸிக்னேச்சர் தேடாதே. இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை நடத்தறதுக்குள்ள... உங்களையெல்லாம் சமாளிக்கிறதுக்குள்ள எனக்கே முழி பிதுங்குது. இதில உங்களுக்கெல்லாம் அசரீரி வேறே அனுப்பணுமாக்கும்?"
"அப்படீன்னா…எனக்கு பிரசினை வரும்போதெல்லாம்..."
"நீதான் சமாளிக்கணும். அதுக்குத்தானே மூளையும் தந்துருக்கேன்? அப்ப அதை எடுத்துரவா?"
"அப்ப தற்செயல்தானா?"
"உன் செயலை யோசித்து செய்து உருப்படப்பாரு. And pray. அதான் என் பர்மனண்ட் அசரீரி. God is not for it, Got it?"
“Got it!” அமைதியானான்.
><><
- கே. பி. ஜனார்த்தனன்



No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!