‘இந்தச் சிந்தனை சூழ் காலத்தில் மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயம் நாம் இன்னும் சிந்திப்பது இல்லை என்பதுதான்!’
‘மிகப்பெரும் சிந்தனைகளைக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி மிகப்பெரும் தவறுகளை செய்கிறார்கள்.’
‘இயற்கைக்கு சரித்திரம் இல்லை.’
‘சாவைக் கையில் எடுத்து அதை ஒத்துக் கொண்டு நேருக்கு நேராக நோக்கினால்தான் சாவின் கவலையிலிருந்தும் வாழ்வின் சிறுமையிலிருந்தும் விடுபட்டு நான் நானாக முடியும்.’
‘காலமும் இருப்பும் ஒன்றை ஒன்று நேர்மாறாக விதிக்கின்றன. இருப்பை காலம் சார்ந்ததாகவோ காலத்தை இருப்பதாகவோ கருத முடியாது.’
‘மொழியை வடிவமைப்பதும் வழி நடத்துவதும் தானே என்று மனிதன் நினைக்கிறான். ஆனால் மொழிதான் அவனை நடத்துகிறது.’
‘ஒவ்வொரு மனிதனும் பல நபர்களாகப் பிறக்கிறான்; ஒற்றை ஆளாக இறக்கிறான்.’
‘அடிப்படையில் டெக்னாலஜி மனிதனின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதல்ல.’
‘எல்லாமும் ஏன் இருக்க வேண்டும்? ஒன்றுமே இல்லாமல் இருந்திருக்கலாமே? அதுதான் கேள்வி.’
சொன்னவர்: Martin Heidegger. ஜெர்மன் தத்துவ மேதை. இன்று பிறந்தநாள்!
இவரின் 'Being and Time' மிகப் பிரபல புத்தகம்.
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!