Thursday, July 28, 2016

அவள் - கவிதைகள்...

281
என் கனவுகளை 
எத்தனை கலைத்துப் போட்டாலும்
மறுபடி ஒன்று சேர்ந்து
நீயாகி விடுகிறது.


282
திரும்பும் இடமெல்லாம் 
நீ என்பதால், 
எது உன் நிஜத் தோற்றம்
என்றறிய முடியாமல் நான்.

283
வாழ்க்கைத் திரையின்
ஒலியும் ஒளியும் 
நீ.

284.
ஏனென்று கேட்கிறாய்,
நீயென்று சொல்கிறேன்.

285
உதிர்ந்து விழும் உன்
கூந்தல் மலர்களிலிருந்து
எழுந்து பரவுகிறது நம்
உரையாடல்களின் ஞாபக மணம்.

286
கன்னம் சிவக்காதே,
வாகனங்கள் நின்றுவிடுகின்றன!...

287
தலை சாய்த்து
புருவம் குவித்து
கடைக்கண் செலுத்தி
வீசிடும் புன்னகை...
நானில்லை மீதி சொல்ல.

288
கொஞ்சம் உன்
கண்களை அதட்டி வை.
குறுக்கே குறுக்கே 
பேசிக்கொண்டு!

289
புன்னகை ஒரு பத்து,
பார்வை ஒரு பத்து,
ஆக இருபது டிகிரி
குளிர்ந்தது சூழல்.

290
சிரித்துவிட்டு போய்விடுகிறாய்,
சில்லறையைப் பொறுக்கி முடிக்க 
சில நாளாகிறது.

><><

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

என் கனவுகளை
எத்தனை கலைத்துப் போட்டாலும்
மறுபடி ஒன்று சேர்ந்து
நீயாகி விடுகிறது.

அருமை நண்பரே

ரிஷபன் said...

கண்களை அதட்டி வை..
முடியுமா என்ன..

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை.

சிரித்துவிட்டு போய்விடுகிறாய்,
சில்லறையைப் பொறுக்கி முடிக்க
சில நாளாகிறது.

மிகவும் ரசித்தது.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!