Monday, February 8, 2016

அவள் - கவிதைகள்

253
ஒளிந்திருக்கிறது உன் 
பார்வையில் ஒரு புன்னகை,
புன்னகையில் ஒரு பார்வை.

254
என்னை நானாக 
வைத்திருக்க 
எனக்கென அமைந்தவள் நீ.

255
வாழ்க்கைத் திரையின்
எல்லா ஃப்ரேமிலும்
நீ இருக்கிறாய்.

256
உன் பின்னாலேயே 
சென்ற என் பார்வை
வரவேயில்லை திரும்ப என்
கண்ணுக்கு.


257
என்னமோ இருக்குது
அந்தக் கண்களில்,
இன்னும் கண்டுபிடிக்க
முடியவில்லை.

258
தவமிருக்கிறேன்
என் மேல் விழுந்த உன் பார்வையை
தக்கவைத்துக் கொள்ள.

259
எத்தனையோ அற்புதங்கள்
என்னைச் சுற்றி
எல்லாவற்றுக்கும் மேலாக
நீ.


><><><

3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

256 உன் பின்னாலேயே சென்ற என் பார்வை வரவேயில்லை திரும்ப என் கண்ணுக்கு.//

சபாஷ்!

அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

balaamagi said...

என் மேல் விழுந்த உன் பார்வையை தக்கவைத்துக் கொள்ள,,

அருமை அருமை,,
அனைத்தும் அருமை,,

rammalar said...

அனைத்தும் அருமை...

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!