Wednesday, February 3, 2016

அவள் - (கவிதைகள்)

246
உறைந்து ஜீரோ டிகிரிக்குப் 
போய்விடத் தெரிந்தேன்
இப்படியா குளிர வைப்பது 
உன் பார்வை?

247
தேடப் பிடிக்கிறது எனக்கு
தேடவைக்கப் பிடிக்கிறது உனக்கு.

248
அளித்திடும் உன் ஒரு புன்னகை
அகன்றிடும் அந்நாளின் தனிமை.

249
முன்னூறு கவிதை 
கேட்கிறது உன்
புன்னகை மட்டுமே.

250
தலை சாய்த்து நீ
புன்னகைக்கையில்
அலை சாய்ந்து
இழுத்துச்செல்லும்
மணல் போல நான்.

251
ஒரு நீ.
இந்த உலகம்.

252
சற்று முன் உன்னைப் பார்த்ததால்
வானவில் வண்ணமற்று...

><><><

3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//246 உறைந்து ஜீரோ டிகிரிக்குப் போய்விடத் தெரிந்தேன் ..
இப்படியா குளிர வைப்பது உன் பார்வை?//

சூப்பர். முதல் கவிதையிலேயே குளிர்ந்து போன நான், மேற்கொண்டு ஒவ்வொன்றையும் படிப்பதற்குள் முரட்டுக் கம்பளியொன்றை எடுத்துப் போர்த்திக்கொண்டேன். :)

அனைத்தும் அருமை. குளுமை. பாராட்டுகள்.

settaikkaran said...

//முன்னூறு கவிதை
கேட்கிறது உன்
புன்னகை மட்டுமே.//

சீக்கிரம் மீதி 48 கவிதையும் எழுதிடுங்க. :-)

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!