Sunday, May 3, 2015

நல்லதா நாலு வார்த்தை... 46



’முழு மனதோடு செய்யுங்கள் 
உங்கள் வேலையை
வெற்றி அடைவீர்கள்,
போட்டி வெகு சொற்பம்.’
-Elbert Hubbard
(‘Do your work with your whole heart, and
you will succeed – there’s so little competition.’)
<>

'கனவைப் போல ஒன்றில்லை, எதிர் 
காலத்தை உருவாக்கிட.'
- Victor Hugo
(‘There is nothing like a dream to 
create the future.’)
<>

'உற்சாகமே விவேகத்தின் 
சர்வ நிச்சய அறிகுறி.’.
- Michel de Montaigne
(’The most certain sign of 
wisdom is cheerfulness.’)
<>

‘கற்றை நினைவுகள் அத்தனையும் ஈடாகாது
ஒற்றைச் சிறிய நம்பிக்கைக்கு.’
- Charles M Schulz
(‘A whole stack of memories 
never equal one little hope.’)

<>

ஏதும் அறியோம்
என்பதறிவதே 
உண்மையில் ஒரே 
விவேகம்.’
- Socrates
(‘The only true wisdom is in knowing
you know nothing.’)
<>

’எந்நற்செயல்களைக்
கட்டமைத்திடினும் அவை 
நமைக் கட்டமைப்பதில் 
முடிகின்றன.’
- Jim Rohn 
(‘Whatever good things we build
end up building us.’)
<>

'இசை பற்றி ஓர் இசைவான விஷயம்,
அது நம்மை அறையும்போது
நமக்கு வலிப்பதில்லை.'
- Bob Marley
('One good thing about music, when it
hits you, you feel no pain.')
<><><>

7 comments:

ரிஷபன் said...

இசை பற்றி ஓர் இசைவான விஷயம்,
அது நம்மை அறையும்போது
நமக்கு வலிப்பதில்லை.' - உண்மைதான்

திண்டுக்கல் தனபாலன் said...

விவேகம் மிகவும் அருமை...

வெங்கட் நாகராஜ் said...

வளமான எதிர்காலத்திற்கு கனவு காணுவோம்....

அனைத்துமே அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
அருமையாக கருத்துக்கள் பகிர்வுக்கு நன்றி. த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

அனைத்தும் அருமை நண்பரே
நன்றி
தம +1

ராமலக்ஷ்மி said...

நல்ல வார்த்தைகள். அருமையான தமிழாக்கம். நன்றி.

Yarlpavanan said...

சிறந்த எண்ணங்கள் மின்னுகின்றன
தொடருங்கள்

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!