Wednesday, December 31, 2014

நல்லதா நாலு வார்த்தை.... 40.


’இதோ, வாழ்க்கை 
இனிதாகி விடுமென்று 
எப்போதுமே அவன் 
எதிர்பார்ப்பதால்
மனிதனின் நிஜ வாழ்வு 
மகிழ்வானதே.’
-Edgar Allan Poe
(‘Man’s real life is happy, chiefly because
he is ever expecting that it soon will be.’)

<><>

’பணம் இந்த உலகை 
சுற்ற வைக்கிறதென்றால்
அது தறிகெட்டு ஓடாமல் 
பார்த்துக் கொள்கிறது 
நகைச்சுவை.’
- Craig Kimberley
(‘If money makes the world go round, it’s humour
that keeps it from spinning out of control.’)
<><>

‘தங்கள் 
கனவுகளின் வனப்பில் 
நம்பிக்கை கொண்டவர்களுக்கே 
உரியது வருங்காலம்.’
- Eleanor Roosvelt
(‘The future belongs to those who believe
in the beauty of their dreams.’
<><>

'புதிய யுக்தி ஒன்றுடன் 
வரும் மனிதன் 
பித்துக்குளி எனப்படுகிறான்
அது 
வெற்றி பெறும் வரையில்.’
- Mark Twain
(‘The man with a new idea is
A crank until the idea succeeds.’)
<><>

‘நிரப்புவதற்கு நிறைய விஷயம் இருந்தால் 
ஒரு நாளுக்கு நூறு பைகள்!’
- Friedrich Nietzsche 
('When one has much to put in them, 
a day has a hundred pockets.')
<><>

’பாதி சரியாக எப்போதும் இருத்தலை
பாதி நேரம் சரியாக இருத்தல்
முறியடித்து விடுகிறது.’
- Malcolm Forbes
(Being right half the time beats
being half-right all the time.)
<><>

’ஒன்றாய்ச் சிரிக்கவல்லமையே 
அன்பின் சாரம்.’
- Francoise Sagan 
(’The ability to laugh together is the essence of love.’)

><><><><

(படம் - நன்றி : இணையம்)

8 comments:

தி.தமிழ் இளங்கோ said...

எழுத்தாளர் கே.பி.ஜனா அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

அனைத்துப் பொன்மொழிகளும் நன்று.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

கவிதை மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

மனோ சாமிநாதன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

பொன்மொழிகள் நன்று..

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோ

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை......

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நிலாமகள் said...

‘தங்கள்
கனவுகளின் வனப்பில்
நம்பிக்கை கொண்டவர்களுக்கே
உரியது வருங்காலம்.’//

தமிழர் திருநாள் வாழ்த்துகள் சார்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மொழியாக்கங்கள் அருமை.

//’பணம் இந்த உலகை சுற்ற வைக்கிறதென்றால் அது தறிகெட்டு ஓடாமல் பார்த்துக் கொள்கிறது நகைச்சுவை.’//

:)

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!