Tuesday, December 2, 2014

விநாடிகள் வீணல்ல...


அன்புடன் ஒரு நிமிடம் - 70
”வாங்க சித்தப்பா!”
யாழினி வரவேற்க வீட்டினுள் நுழைந்த ராகவ், எட்டிப் பார்த்தார் கிஷோரின் அறையை.
ஓங்கி மேஜையில் குத்துவதும் சே! என்று தலையில் அடித்துக் கொள்வதுமாக. கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்தான்
என்ன என்கிற மாதிரி இவளைப் பார்த்தார். இவள் தெரியலையே என தோள்களைக் குலுக்கினாள்.
இவரைப் பார்த்ததும் அவனே சொன்னான். “ரொம்ப ஸ்லோ இந்த கம்ப்யூட்டர். இதை வெச்சிட்டு நான் படற பாடு!”
மறுபடியும் தலைக்குக் கொண்டுபோன கையைத் தடுத்தார் ராகவ். “சொல்லு, என்ன ப்ராப்ளம்?”
”அதைத்தானே சொன்னேன்? மெதுவா வொர்க் பண்ணுது. க்ளிக் பண்ணினா ஒவ்வொரு சைட் வர லேட் ஆகுது. செம எரிச்சலா இருக்கு. ஒரு பேஜ் பார்த்துட்டு அடுத்ததுக்கு போனா உடனே திறக்க வேண்டாமா? ஒவ்வொரு சமயம் ரெண்டு, மூணு செகண்ட் அப்படியே உட்கார்ந்திட்டிருக்க வேண்டியிருக்கு. ஒரு மெயில் எழுதி பட்டுன்னு அனுப்ப முடியுதா?”
“அப்படியா நல்ல சந்தோஷமான சமாசாரமா இருக்கே? என்ன பண்ணினே? எப்படி நடந்தது?”
திகைத்துப் போய்க் கேட்டான். ”இதில சந்தோஷப்பட என்ன இருக்கு? நான் ரிப்பேர் பார்க்க வழி தேடிட்டு இருக்கேன். நீங்க என்னன்னா…”
Actually, இப்படியெல்லாம் இல்லையே என்னோட லேப் டாப்ன்னு நான் வருத்தப்பட்டுட்டு இருக்கேனாக்கும்… நான் சொல்ல வர்ற விஷயம் என்னான்னா பட் பட்னு ஸ்க்ரீன் ஓபன் ஆகிட்டிராமல் நிதானமா திறக்கிறது நாம அமைதியா, பரபரப்பில்லாம, டென்ஷன் ஆகாமல் வேலை பார்க்க உதவுது. படித்த, பார்த்த விஷயத்தை ஒரு கணம் ஆழ்ந்து உள் வாங்கிக்க வழி வகுக்குதுன்னு நான் நம்பறேன்.”
நேர் எதிராகச் சொன்னவரை நிமிர்ந்து பார்த்தான். அவர் தொடர்ந்தார். “…அப்பப்ப க்ளிக் செய்து நிற்கிற அந்த ரெண்டு செகண்டில் மனசைத் திருப்பு. அந்த சூழ்நிலையை பார். இப்படி ஒரு உலகமே கண்முன் விரிகிற விஞ்ஞான விந்தையை நீ அனுபவிப்பதை உணர்.  ஓரத்தில் மலரும் விளம்பர ஓவியத்தை ரசி.  அவ்வப்போது கண்ணை ஜன்னலில் ஓடவிட்டு அதற்கு ஒரு தூரப் பார்வை கொடுப்பதும் நல்லதுதானே?. கண் மூடி ஒரு செகண்ட் ரெஸ்ட் கொடு. ஹாலில் யாழினி முணு முணுக்கும் பாட்டைக் கேள். நேற்று அவள் சொன்ன ஜோக்கை நினைவு கூர். சுற்றிலும் பார். ஒரு முறை இழுத்து மூச்சை விடு. சோம்பல் முறி. இந்த மாதிரி சின்னச் சின்ன இண்டர்வெல்கள் நாம செய்திட்டிருக்கிற விஷயத்துக்கு விதம் விதமா பூட்டற ஃப்ரேம்களை அறிந்து கொண்டாயானால் இது உனக்கு ஒரு குறையே அல்ல.”
ரெண்டு செகண்டில் அவன் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது.    

 ('அமுதம்’ மார்ச் 2014 இதழில் வெளியானது.)
><><><
(படம்- நன்றி : கூகிள்)

9 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா அருமை
கணினிக்காகக் காத்திருக்கும் நேரத்தில் இவ்வளவு செயல்களைச் செய்யலாமா

கரந்தை ஜெயக்குமார் said...

தம +1

ரூபன் said...

வணக்கம்
ஐயா.
கதை அருமையாக உள்ளது அமுதம் இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராஜராஜேஸ்வரி said...

அமுதம் இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை..........

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே பாசிட்டிவ் ஆக எடுத்துக் கொண்டால் இனிது....

நல்ல தத்துவம்.

ராமலக்ஷ்மி said...

காலத்திற்கேற்ற ஆலோசனை:). அருமை.

Dr B Jambulingam said...

நேர்மறை சிந்தனைகள் நம்மை மேம்படுத்தும் என்பதற்கு உதாரணம் இப்பதிவு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//திகைத்துப் போய்க் கேட்டான். ”இதில சந்தோஷப்பட என்ன இருக்கு? நான் ரிப்பேர் பார்க்க வழி தேடிட்டு இருக்கேன். நீங்க என்னன்னா…”//

இதற்கு அவர் பொறுமையாகச் சொன்ன பதில் அருமையாகத்தான் உள்ளது. இருந்தாலும் ......

அமுதம் இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!