Friday, June 6, 2014

அவள் - 4


16

சிதறிய சில்லறையைப்

பொறுக்கத் திரும்பினேன், நீ

சிரித்து முடிக்கிறாய்.

 

17

பட்டாம் பூச்சி தன்

இறகுகளை

ஒற்றிக் கொண்டாற்போல

புன்னகைக்கின்றன

உன் உதடுகள்.

 

18

நீ ஒரு பக்கம்

உன் சிரிப்பு ஒரு பக்கம்

ஆளுக்கு ஆள் இழுத்தால்

நான் எங்கே போவது?

 

19

அருகில் வா

ஆரும் சொல்லாத ஒரு

கவிதை சொல்கிறேன்

உன்னைப் பற்றி.

 

20

எதிரில் நிற்காதே

எழுத வேண்டும்

உன்னைப் பற்றி

ஒரு கவிதை.

 

21.

உன்னை வியந்து

வியந்து

இன்னும்

வியந்து கொண்டே...

 

22

 நீ

எங்கே பார்த்தாலும்

எதைப் பார்த்தாலும்

என்னைப் பார்ப்பது

போலவே
 
><><><
 
(படம்- நன்றி: கூகிள்)

12 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

’அவள்’ பற்றிய சிந்தனை வரிகள் அருமை.

பால கணேஷ் said...

16, 17, 18, 22 ஆகியவை பிரமாதம். மற்றவையும் நன்றே. அழகுக் குறும் பாக்கள்.

”தளிர் சுரேஷ்” said...

சுவையான குறும்பாக்கள்!

இடைவெளிகள் said...

arumai

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

இரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்
த.ம 2வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

ரசித்தேன்
சுவைத்தேன்
நண்பரே

கரந்தை ஜெயக்குமார் said...

தம 3

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்வு வெகு ஜோர்...

Rekha raghavan said...

அவள் ஏழும் ஏழு ஸ்வரங்கள். அருமை.

ரேகா ராகவன் (அரோரா, சிகாகோவிலிருந்து

ராமலக்ஷ்மி said...

இனியவள்!

வெங்கட் நாகராஜ் said...

அவள் பற்றிய கவிதைகள் அனைத்துமே அருமை.... ரசித்தேன்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!