Monday, June 23, 2014

நல்லதா நாலு வார்த்தை... 33



'புத்திசாலிகளிடம் சந்தோஷம்
 நானறிந்தவரை அதிசயம்!'
 - Ernest Hemingway
 ('Happiness in intelligent people
 is the rarest thing I know .’)
<> 

இனிய எளிய விஷயங்களே
 இறுதியில் வாழ்வில்
 நிஜமானவை.’
- Laura Ingalls Wilder
 (‘It is the sweet, simple things of life
 which are the real ones after all.’)
<> 

‘இரவில் படுக்கைக்குச் செல்கையில்
அன்பு, நம்பிக்கை, மன்னித்தல்
இம்மூன்றைத் தலையணையாகக் கொள்.
இதயத்தில் ஓர் பாடலுடன்
எழுவாய் காலையில்.'
 - Victor Hugo
 ('When you go to bed at night, have for your pillow
 three things: love, hope and forgiveness. And you will
 awaken in the morning with a song in your heart.’)
<> 

‘வாழமுடியும் என்
வாழ்க்கையை மறுபடியும் எனில்
வாரம் ஒரு தடவையேனும்,
கொஞ்சம் கவிதை படிக்கவும்
கொஞ்சம் இசை கேட்கவும்
உறுதி கொள்வேன்.’
-Charles Darwin
 (‘If I had my life to live over again, I would have
made a rule to read some poetry and listen to
some music at least once every week.’)
<>

‘ஓர் இதயம் நொறுங்குவதைத்
தடுக்க முடியுமானால்
வீணல்ல நான் வாழ்வது.’
- Emily Dickinson
 ('If I can stop one heart from breaking,
 I shall not live in vain.’).
<>

புத்திசாலியாக இருக்க இருக்க
புதிதாய்த் தெரிந்துகொள்ள வேண்டியது
நிறைய இருக்கும்.’
- Don Herold
 (‘The brighter you are, the more you have to learn.)
<>

‘பின்னோக்கித்தான்
புரிந்துகொள்ள முடியும்
வாழ்க்கையை; ஆனால்
முன்னோக்கித்தான் அதை
வாழ்ந்தாக வேண்டும்.’
- Soren Kierkegaard
 (‘Life can only be understood backwards;
 but it must be lived forwards.’)

><><>< 

(படம்- நன்றி : கூகிள்)

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வழக்கம் போல்
அருமை
அருமை
தம 2

திண்டுக்கல் தனபாலன் said...

கொஞ்சமல்ல.... நிறையவே உறுதி கொள்வேன்...!

ஹ ர ணி said...

அன்புள்ள ஜனா.

வணக்கம். இன்றைக்கு மொழிபெயர்ப்புக்குத்தான் ஆள் இல்லை. உங்களின் பணி சிறப்பானதாகும். அருமையாகவும் எளிமையாகவும் மொழிபெயர்க்கிறீர்கள்.

தொடர்ந்து செய்யுங்கள். அதேபோன்று தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு முயன்று பாருங்கள். நன்றி.

கீத மஞ்சரி said...

அற்புதமான பயனுள்ள சிந்தனைத் துளிகள். அருமை. பாராட்டுகள் ஜனா சார்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான சிந்தனைகள்... தமிழில் தந்தமைக்கு நன்றி.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!