Tuesday, June 10, 2014

நல்லதா நாலு வார்த்தை... 32


 


 ஒரு முறையே வாழ்கிறோம்,

ஆயினும்

ஒழுங்காக அதை செய்வதானால்

அந்த

ஒரு முறையே போதும்.’

- Mae West

 (’You only live once, but if you do it right, once is enough.’)

<> 

தைரியம் எனப்படுவது,

நாம் பயப்படுவதைத் தெரிந்த ஒரே நபர்

 நாமாக மட்டும் இருப்பது!’

- Franklin Jones

 (‘Bravery is being the only one who

knows you’re afraid.’)

<> 

அதிலிருந்து தான் பெற்றுக் கொண்ட
அளவுக்கேனும் அவனிக்குத் திருப்பி
அளிக்க வேண்டிய கடப்பாடு
அனைவருக்கும் இருக்கிறது.’
- Albert Einstein
(‘It is everyman’s obligation to put back into the world
at least the equivalent of what it takes out of it.’)

<> 

‘செய்த நம் பிரார்த்தனைகள் பல

 செவிமடுக்கப் படவில்லை;

நாம் இப்போது அதற்காக

 நன்றி காட்டுகிறோம்!’

- William Feather

 (‘Many of our prayers were not answered,

 and for this we are now grateful.’)

<> 

இன்றால் ஒளியூட்டு

 நாளையை!

-Elizabeth Barrett Browning

 (‘Light tomorrow with today.’)

<> 

வாழ்க்கையில் முக்கியம் என்பது

 வாழ்க்கை.

வாழ்க்கையின் விளைவு அல்ல.’

-Goethe

 (‘What is important in life is life, and

 not the result of life.’)

<> 

சிலசமயம் கீழே விழுந்து

 தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது

 நாம்  நின்றிருந்த உயரத்தை.’

- Hayley Williams

 (‘Sometimes it takes a good fall to really

know where you stand.’)

><><>< 

8 comments:

ராஜி said...


’சிலசமயம் கீழே விழுந்து

தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது

நாம் நின்றிருந்த உயரத்தை.’
>>
ஆயிரம் அர்த்தங்களை சொல்லிச் சென்றது. அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

நாமாக மட்டும் இருப்பது உட்பட அனைத்தும் அருமை...

இராஜராஜேஸ்வரி said...

இன்றால் ஒளியூட்டு நாளையை!

ஒளியூட்டும் நல்லதாக நாலு வார்த்தைகள்..!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தம 3

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அனைத்தும் நன்று..

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் அருமை. முதலும் கடைசியும் மிகப் பிடித்தது.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை... கடைசி பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்லிப் போனது!

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதாக நாலு வார்த்தைகள்.. ஒளியூட்டி உதவின. பாராட்டுக்கள்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!