Wednesday, February 26, 2014

நல்லதா நாலு வார்த்தை… 26


'எந்த அளவு வேலையும்
எவரும் செய்ய முடியும்,
அவர் அப்போதுசெய்யவேண்டிய வேலை
அதுவாக இல்லையெனில்!'
-Robert Benchley
('Anyone can do any amount of work, provided it isn't
the work he is supposed to be doing at that moment.')
<> 
'எதையேனும் மறக்கமுயலும்வரை
தெரியவில்லை,
எத்தனை அரிய ஞாபக சக்தி
இருக்கிறது நமக்கென்று!'
- Franklin Jones
('You never realize what a good memory you have
until you try to forget something.')
<>

'மிகச்சிறந்த நோக்கத்தை விட
மிகச் சிறிய செயல்
மேல்.'
- John Burroughs
('The smallest deed is better than
the greatest intention.')
<>

'நாம் யாரென்று
நாம் நம்புகிறோமோ
அவர்களே நாம்.'
- C. S. Lewis
('We are what we believe we are.'
<>

'நீளத்தில் குறைவதை
உயரத்தில் சரி செய்து கொள்ளுகிறது
மன மகிழ்வு.'
- Robert Frost
('Happiness makes up in height for what
it lacks in length.')
<>

'அனைத்தும் இழப்பினும்
அடுத்து மீண்டும் தொடங்குவது...
அதுதான் வாழ்க்கை!'
- A.J.Cronin
('That is life...to begin again when everything is lost!')
<>

'தனக்கு வேண்டியதைத் தேடி
தரணி எல்லாம் பயணிக்கும் ஒருவன்
வீடு திரும்ப,
அதைக் கண்டுகொள்கிறான்.'
-George Moore
('A man travels the world over in search of what
he needs and returns to find it.')

<<<>>>
(படம்- நன்றி: கூகிள்)
 
 
 
 
 
 
 
 
 

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை...

மிகச் சிறிய செயல், அவர்களே நாம் - சிறப்பு...

Yaathoramani.blogspot.com said...

வழக்கம்போல் அற்புதமான பொன் மொழிகள்
மொழிபெயர்ப்பு அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

ராஜி said...

'எதையேனும் மறக்கமுயலும்வரை
தெரியவில்லை,
எத்தனை அரிய ஞாபக சக்தி
இருக்கிறது நமக்கென்று!'
>>
நிஜம்தான். மறக்க முயலும்போதுதான் நினைவுகள் பீறிட்டு வருகிறது

கரந்தை ஜெயக்குமார் said...

அத்தனையும் முத்துக்கள்
நண்பரே
நன்றி

ராமலக்ஷ்மி said...

அருமையான பொன்மொழிகள்! தமிழாக்கத்திற்கு நன்றி. இரண்டாவது மிகப் பிடித்திருந்தது.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அனைத்தும் நன்று

இராஜராஜேஸ்வரி said...

'தனக்கு வேண்டியதைத் தேடி
தரணி எல்லாம் பயணிக்கும் ஒருவன்
வீடு திரும்ப,
அதைக் கண்டுகொள்கிறான்.'

இருக்கும் இடத்தைவிட்டு'
இல்லாத இடம் தேடி எங்கெங்கோ
அலையும் ஞானத்தங்கங்கள்..!

ADHI VENKAT said...

அத்தனையுமே அருமை.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் அருமை.....

கடைசி - மிக அருமை....

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!