Sunday, February 2, 2014

தங்களுக்கும்...


அன்புடன் ஒரு நிமிடம் - 53
 ணமே தூக்கியடித்தது ஆளை.

ஹைதராபாத் பிரியாணி.  மிக ஸ்பெஷலாகத் தயாரித்திருந்தாள் தியாகுவின் மனைவி உமா.

"என்னடா தடபுடலா இருக்கு இன்னிக்கு?" என்றபடியே டைனிங் டேபிள் முன் அமரும்போது அதை எதிர்பார்க்கவில்லை வினோத். யமுனாவும் தான்.

சூப்பர் டேஸ்ட் என்று எல்லாரும் சாப்பிட ஆரம்பிக்க தியாகு மட்டும் தயிர் சாதத்தைப் பிசைந்து கொண்டிருந்தான்.

"என்னடா நீ சாப்பிடலே? பிரியாணின்னா உசிராச்சே உனக்கு?"

"அதுவா அங்கிள்? இன்னிக்கு அவருக்கு பிரியாணி கிடையாது," என்றாள் தியாகுவின் பெண்

"என்ன விஷயம்?"

"ஒரு சின்ன பனிஷ்மெண்ட்.தியாகுவின் பையன் ரவின்.

என்ன தப்பு பண்ணினான்?"

"அதுவா? அவரையே கேளுங்க," என்றாள் சித்ரா.

"ஷூவைக் கழற்றாமல் கிச்சன் வரை வந்துட்டேன் நேற்று. இது மூணாவது தடவை. அதான் எல்லாரையும் மாதிரி எனக்கும் ஒரு..."

என்ன வற்புறுத்தியும் குழந்தைகளே சொல்லியும் சாப்பிடவில்லை. கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது அவன் சாப்பிடாமல் தாங்கள் மட்டும் சாப்பிட்டது.  

அப்புறமாக வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது "இந்தாடா முடிச்சிட்டேன்!," என்று சித்ரா ஒரு நோட்புக்கை தன் மகனிடம் தர, அதை வாங்கிப் பார்த்தான் வினோத். " என்ன எதாச்சும் கரெஸ்பாண்டன்ஸ்  கோர்ஸ் படிக்க ஆரம்பிச்சிட்டீங்களா?"

உள்ளே வரி வரியாக இதென்ன...

'நான் இனிமேல் நகம் கடிக்க மாட்டேன்.'

'நான் இனிமேல் நகம் கடிக்க மாட்டேன்...'

"என்ன இது இம்பொசிஷன்  மாதிரி..."

"அதே தான் மாமா' இவங்களுக்கு நிச்சயமா தரணும்இதோட அஞ்சாவது. அதான் இந்த ஐநூறு!" என்று பதில் வந்தது. 

மறுநாள் தியாகுவை இலக்கியக் கருத்தரங்கு ஒன்றுக்கு அழைத்தான். "என்னடா வர்றியா இல்லே வீட்டில எதாச்சும் இம்பொசிஷன் வேலை ?"

"கிண்டலா? அப்படியே இருந்தாலும் போயிட்டு வந்து எழுத அனுமதி உண்டாக்கும்! இருந்தாலும் ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்க, பிள்ளைகளுக்குத் தெரிகிற, அவங்க செய்தால் தப்புன்னு சொல்லுகிற சில விஷயங்களை நாமும் சில வேளைகளில் செய்யறோம். நைசா ஏதாச்சும் சாக்கு அல்லது ஆழமா ஏதும் காரணம் சொல்லி நழுவிடறோம்அவங்க தப்பு செய்தால் மட்டும் குற்றம் சொல்லிவிட்டு அதே மாதிரி நாம் நடந்துக்கும்போது மட்டும் கண்டுக்காமல் இருந்தால் நம்ம மேல அவங்களுக்கு இருக்கிற மதிப்பும் பிரமிப்பும் நம்பிக்கையும் ரொம்பவே குறைஞ்சு போயிடும் இல்லையாநம்ம கண்டிப்புக்குப் பின்னாலிருக்கிற காரணம் சரியானதுன்னு அவங்களுக்கு ஐயமறப் புரியணும் இல்லையா? அதனாலதான் இப்படி எங்கள் வீட்டில் ஒரு பழக்கம் வெச்சிருக்கோம் நானும் அவளும்."

அவன் விளக்கம் இவனுக்கு ஓர் விழிப்பைக் கொடுத்தது.

('அமுதம்' அக்டோபர் 2013 இதழில் வெளியானது)

<<<>>>
( படம் - நன்றி: கூகிள் )  
 

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// நம்ம மேல அவங்களுக்கு இருக்கிற மதிப்பும் பிரமிப்பும் நம்பிக்கையும் ரொம்பவே குறைஞ்சு போயிடும் இல்லையா? /// கண்டிப்பாக 100% உத்தரவாதம்...!

அமுதம் இதழில் வெளி வந்தமைக்கு வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் இணைத்து விட்டேன்... நன்றி...
+1

Avargal Unmaigal said...

//
அவன் விளக்கம் இவனுக்கு ஓர் விழிப்பைக் கொடுத்தது.///

இந்த கதையை படிப்பவர்களுக்கும் ஒரு விழிப்பை கொடுத்துதான் செல்கிறது. பகிர்வுக்கு பாராட்டுக்கள்

இராஜராஜேஸ்வரி said...

அமுதம் இதழில் வெளி வந்தமைக்கு வாழ்த்துக்கள்...

புலவர் இராமாநுசம் said...

கதையும் கருத்தும் நன்று!

..

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

/./பிள்ளைகளுக்குத் தெரிகிற, அவங்க செய்தால் தப்புன்னு சொல்லுகிற சில விஷயங்களை நாமும் சில வேளைகளில் செய்யறோம். நைசா ஏதாச்சும் சாக்கு அல்லது ஆழமா ஏதும் காரணம் சொல்லி நழுவிடறோம். // உண்மை தான்..நல்லதொரு தீர்வு தான்..நன்றி!

ராமலக்ஷ்மி said...

நல்ல வழக்கம். கதை அருமை.

Ramani S said...

எங்களுக்கும் விழிப்பைத் தந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

tha.ma 3

கோமதி அரசு said...

நல்ல கதை.
வாழ்த்துக்கள்.

கீத மஞ்சரி said...

முன் ஏர் போனவழியேதான் பின் ஏர் போகும் என்பதை எவ்வளவு நயமாக அழகான கதையாக உணர்த்திவிட்டீர்கள். பாராட்டுகள் ஜனா சார்.

கவியாழி கண்ணதாசன் said...

சிறந்த கதைக்கு சிறப்பான வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கதை. நல்ல பகிர்வு.

Senthil said...

அருமையான பதிவு எங்கள் வீட்டில் இனி தொடர போகிறோம்

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!