Sunday, November 17, 2013

தீபம்.

 
<*> <*> <*>

ளியில்
ஒளிந்திருக்கும் பெரு
வெளியில் சஞ்சரிக்கிறேன் .
எங்கும் பிரகாசமாக.
எல்லாம் ஒன்றாக.
எதுவும் மகிழ்ச்சியாக.

கார்த்திகை திருநாள் மனதின்
கார்மேகம் கனிந்து
உள்ளுக்குள்ளும்
பொழிகிறது மழை.

தீபங்களின் நடுவே
தீவாக நின்று துதிப்பது
வேறெதிலும் கிடைத்திராத
தீராத சந்தோஷம்.

தீபத்தால் ஆராதனை
செய்கிறோம். இன்று
தீபத்தை ஆராதிக்கிறோம்.

 
<*> <*> <*>
(மீள் பதிவு)
 
(படம் - நன்றி:கூகிள்) 

12 comments:

இராஜராஜேஸ்வரி said...

தீபத்திருநாளில்
தீபத்தை ஆராதிக்கிறோம்.

கவியாழி said...

ஆம் கார்த்திகை தினவாழ்த்துக்கள்

தி.தமிழ் இளங்கோ said...

கார்த்திகைத் திருநாள்! தீபத் திருநாள்! வாழ்த்துக்கள்!

ராஜி said...

கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான சிறப்புப் பதிவு
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 4

வை.கோபாலகிருஷ்ணன் said...

//தீபத்தால் ஆராதனை செய்கிறோம்.
இன்று தீபத்தை ஆராதிக்கிறோம்.//

அருமை. மிக அருமையான சொல்லாடல். பாராட்டுக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

Avargal Unmaigal said...

தீபம் போல உங்கள் கவிதையும் பிரகாசமாக இருக்கிறது பாராட்டுக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

தீபத் திருநாளில் சிறப்பான மீள் பதிவு....

அனைவருக்கும் வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாதம்..

அருமை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!