Monday, November 4, 2013

மகிழ் கணங்கள்...


 
லிந்து கிடக்கும் மகிழ் கணங்களை

மனதில் ஏற்றிக் கொள்வதெப்படி?

முகிழ்த்து நிற்கும் மொட்டுக்களின் புதுமையை  

முதுகில் ஏந்திக் கொள்வதெப்படி?

கலந்து பரந்திருக்கும் கவின் கோலங்களை 

கண்ணில் ஒற்றிக் கொள்வதெப்படி?

விரிந்து உயர்ந்திருக்கும் விண்ணினின்றும்  

வியப்புக்களை  பெற்றுக் கொள்வதெப்படி?

நட்டு வைத்திருக்கும் நவரசங்களிலிருந்து

பரவசங்களைப்  படகேற்றுவதெப்படி?

புரிவன புரிந்து புவனத்தைப் 

புரிந்து கொள்வதெப்போது?

<<<>>>

 (படம் - நன்றி; கூகிள் )
 

15 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

எப்படி, எப்படி, எப்படி என்று கேட்டே “மகிழ் கணங்கள்...” என்ற தலைப்பில் இவ்வளவு அழகாக நீங்கள் எழுதியது எப்படி ?

பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

/புரிவன புரிந்து புவனத்தைப் புரிந்து கொள்வதெப்போது?//

’புவனா ஒரு கேள்விக்குறி’ போலவே, இந்த புவனமும்.

புரிந்துகொள்வது மிகவும் கடினம். ;)

இராஜராஜேஸ்வரி said...

மகிழ் கணங்கள்
மனதில்
முகிழ்த்து நிற்கும் மொட்டுக்களாய்
மலர்ந்தன...வாசம் வீசின..!

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வேண்டிய கேள்விகள் அருமை...

”தளிர் சுரேஷ்” said...

பக்குவம் வரும் வரை பாடம் படித்திட வேண்டியதுதான்! அருமையான கவிதை! நன்றி!

கவியாழி said...

நட்டு வைத்திருக்கும் நவரசங்களிலிருந்து

பரவசங்களைப் படகேற்றுவதெப்படி?///நன்றாகத்தானிருக்கும்

மாதேவி said...

மகிழ்கணங்கள் மணம்பரப்பி நிற்கின்றன.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

//புரிவன புரிந்து புவனத்தைப்

புரிந்து கொள்வதெப்போது?// புரியாமல் இப்படி கேள்வி கேட்பதுதானே அழகாய் இருக்கிறது...நல்ல கவிதை!

Anonymous said...

purinthu kolvathu kadiname !

ராஜி said...

புரிவன புரிந்து புவனத்தைப்

புரிந்து கொள்வதெப்போது?
>>
விரைவில் புரிந்து கொள்ளாட்டி கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடுமே

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கவிதை.

த.ம. 3

கோமதி அரசு said...

மகிழ் கணங்கள் அருமை.

Anonymous said...

அது அது நடக்கறப்ப நடக்கும்பா..கடக்குது கழுதை..இருக்கற வேலையைப்பாருப்பா..

மனோ சாமிநாதன் said...

கடைசி இரண்டு வரிகள் அருமை! புவனத்தைப்புரிந்து கொள்வது தானே கடினம்?

பால கணேஷ் said...

வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்னு கவிஞர் விரக்தியாப் பாடின இந்த வையகத்தைப் புரிஞ்சுக்கறது ரொம்பவே கஷ்டம்தான் ஐயா...! அழகுக் கவிதை மனதில் குடிகொண்டது!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!