Sunday, November 24, 2013

நல்லதாக நாலு வார்த்தை... 23


திருப்தி,

வறியோரை 

செல்வராக்குகிறது

அதிருப்தி,

செல்வரை

வறியோராக்குகிறது.’

-Benjamin Franklin
('Content makes poor men rich;
discontentment makes rich men poor.')
 
<> 
 
'வீழாதிருப்பதல்ல நம் பெருமை; 

வீழும்போதெல்லாம் எழுவதே.' 

-Confucius
('Our greatest glory is not in never falling,
but in getting up every time we do.')

<> 

'திட்டமிட்ட பெருஞ்செயல்களை விட 

செய்திட்ட   சிறு செயல்கள் 

மேலானவை.'

- Peter Marshall 
('Small deeds done are better than great deeds planned.') 

<> 

'தான் விரும்பும் விஷயங்களை

வாழ்க்கையிலிருந்து பெற்றுக்கொள்ளத் 

தவிர்க்க முடியாத முதல் படி, 

தனக்கென்ன வேண்டுமென்பதை

தீர்மானிப்பது.'

- Ben Stein
('The indispensable first step to getting the things
you want out of life is this: decide what you want.')



'உங்கள் திட்டம்

ஒரு வருடத்துக்கானதெனில்

நெல்லைப் பயிரிடுங்கள்,

பத்து வருடமெனில்

மரங்களை நடுங்கள்,

நூறு வருடத்துக்கா?

மனிதர்களுக்கு

கல்வி பயிற்றுவியுங்கள்!'

- Kuan-Tzu
('If your plan is for one year, plant rice;
For ten years, plant trees;
For a hundred years, educate men.')

<>

'உன் தற்போதைய சூழ்நிலை

நீ அடையக் கூடிய இடத்தைத் 

தீர்மானிப்பதில்லை.

நீ தொடங்குகிற இடத்தை மட்டுமே  

தீர்மானிக்கிறது.'

- Nido Qubein
('Your present circumstances don't determine where
you can go; they merely determine where you start.')

<>

'பகிர்ந்தால்

துன்பம்

பாதியாகிறது;

இன்பமோ

இரட்டிப்பாகிறது!'

- Proverb
('Shared joy is a double joy;
shared sorrow is half a sorrow.')

<<<>>> 
 

13 comments:

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான பழமொழிகள்
பகிர்வுக்கும் அருமையான
மொழிபெயர்ப்பிற்கும் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

Anonymous said...

வணக்கம்

பதிவு அருமை வாழ்த்துக்கள்....

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

அனைத்தும் அருமை ஐயா
த.ம.3

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை.....

Anonymous said...

வாவ் ... வார்த்தைகள் ஒவ்வொன்றும் பந்தயத்தில்
முந்துகின்றன முதலிடத்திற்கு நீ நான் என்று.
அத்துணை அருமை. வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் மிகவும் அருமை...

வாழ்த்துக்கள்...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அனைத்தும் அருமை

ADHI VENKAT said...

அருமையான வார்த்தைகள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அத்தனையும் மிக அருமையாக உள்ளன. எதைப்பாராட்டுவது எதை விடுவது என்றே சொல்ல முடியாமல் உள்ளன.

இருப்பினும் 1, 3, 4 + கடைசி என்னை மிகவும் கவர்ந்தன.

பகிர்வுக்குப்பாராட்டுக்கள் + நன்றிகள்.

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான பொன்மொழிகளின் தொகுப்பு! நன்றி!

தி.தமிழ் இளங்கோ said...

// ‘திருப்தி, வறியோரை செல்வராக்குகிறது;
அதிருப்தி, செல்வரை வறியோராக்குகிறது.’

Content makes poor men rich; discontentment makes rich men poor.
-Benjamin Franklin //

உண்மைதான். அளவுக்கு அதிகமான காசு பணம் சொத்து இருந்தும் இன்னும் பலர் பணம் .... பணம் ... என்று அலைகின்றனர். மனத்தளவில் அவர்கள் இன்னும் ஏழைகளே! அவர்கள் சொத்துக்கள் கடைசியில் உண்ணாமல் கொள்ளாமல் வேறு ஒருவருக்கு போய்ச் சேருகிறது.

பொன்மொழிகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!


ராமலக்ஷ்மி said...

பொன்மொழிகளும் தமிழாக்கமும் அருமை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!