Thursday, September 19, 2013

இன்னும்...



காலொடிந்த காக்கைக்கு

எப்படி நேர்ந்தது அந்த விபத்து?


அடை மழை பெய்யும்போது

அணில்கள் எங்கே உறையும்?


நடுநிசியிலும் குரைக்கும் நாய்கள்

எப்போதுதான் உறங்கும்?


எல்லார் வீட்டிலும்

விரட்டப்படும் பூனைக்கு

யார் தான் சோறிடுகிறார்கள்?


ஏழெட்டு எறும்புகள் ஏலேசா பாடி

தூக்கிச் செல்லும் பருக்கை

கூட்டைச் சென்று அடைகிறதா?


சின்ன வயதில் தோன்றிய கேள்விகள்...

இன்னும் விடை கிடைக்கவில்லை.


என்ன, இப்போது இந்த மாதிரி

அசட்டுக் கேள்விகள் தோன்றுவதில்லை!

<<<>>>
(02-12-2009 'விகடனி'ல் வெளியான எனது கவிதை.)
 
(படம்- நன்றி:கூகிள்)
 

15 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

ஆயிரம் ஆயிரம் கேள்விகளோடுதான் ஒவ்வொருவரும் வாழ்கிறோம்.

எனது குழந்தைப் பருவத்துக்கு என்னை அழைத்துச் சென்றது தங்கள் கவிதை.

நன்று.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான அழகான கவிதை.

நியாயமான விடை தெரியாத கேள்விகள்.

விகடன் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.

நிலாமகள் said...

விகடன் பிரசுரத்துக்கு வாழ்த்துக்கள்.

காலொடிந்த காக்கைப் படம் கூட கிடைக்கும் இக்காலமும் வியப்புக்குரியதே...

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வைத்த கேள்விகள் தான்...

வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

சின்ன வயதில் தோன்றிய கேள்விகள்...

இன்னும் விடை கிடைக்கவில்லை.

அசட்டுக்கேள்விகளல்ல. ஆழ்ந்த கேள்விகள்..!

Ranjani Narayanan said...

எல்லோர் மனதிலும் எழும் இக்கேள்விகளுக்கு விடை தேட யாரும் முயலுவதே இல்லை.
சிறுவயதில் கேட்ட கேள்விகளை நினவு படுத்தும் கவிதை.
பாராட்டுக்கள்!

cheena (சீனா) said...

அன்பின் ஜனா

கவிதை அருமை - சிறு வயதில் மனைதில் தோன்றும் ஐயங்களுக்கு விடை சொல்ல யாராலும் முடியாது - விக்டன் இத்ழில் வெளி வந்தமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

தி.தமிழ் இளங்கோ said...

// சின்ன வயதில் தோன்றிய கேள்விகள்...
இன்னும் விடை கிடைக்கவில்லை. //

சின்னச் சின்ன வரிகளில் வளைய வந்த கேள்விகள்.அவைகள் விடை தெரியா கேள்விகள்.

Yaathoramani.blogspot.com said...

அசட்டுக் கேள்விகள் அல்ல அவை
இப்போது நம்மைக் குறித்து மட்டுமே
எண்ணிக் கொண்டு திரிவதால்
அலட்சியப்படுத்தப்பட்ட கேள்விகள் என
வேண்டுமானால் சொல்லலாமோ ?

ராமலக்ஷ்மி said...

விடை கிடைக்காத கேள்விகள் ’இன்னும்’ கொஞ்சம் தொடர்ந்திருக்கலாம்:)! இரசித்தேன்.

வெங்கட் நாகராஜ் said...

அனைவருக்குமே பதில் தெரியாத கேள்விகள்.....

ரசித்தேன்.

உஷா அன்பரசு said...

நல்ல ரசனை!

Rekha raghavan said...

விகடன் "சொல்வனம்" பகுதியில் வந்தபோதே ரசித்தேன். இப்போதும் ரசித்துக் கொண்டிருக்கிறேன்! அருமை சார்!

கோமதி அரசு said...

கால் ஒடிந்த காக்கையும்,மைனாவும் எங்கள் வீட்டுக்கு சாப்பிட வரும். நானும் உங்களை போல் நினைப்பேன்.
அருமையான கவிதை.என் பேரன் உணவை தூக்கிக் கொண்டு எறும்புகள் பாடும் பாட்டையும் அதுகளுக்கு இருக்கும் விரோதிகள், நண்பர்களையும் அனிமேஷன் படமாய் பார்க்கிறான். நானும் அவைகள் படும் பாட்டைப் பார்க்கிறேன்.
விகடனில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அசட்டுக் கேள்விகள் அல்ல, அறிவுக் கேள்விகள்!
விகடனில் வந்ததோ..வாழ்த்துகள்!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!