Monday, September 2, 2013

நல்லதா நாலு வார்த்தை - 15



எல்லாப் பெருமையும்,

துணிந்து தொடங்குவதில்

தோன்றுகிறது.
- Eugene F. Ware
(‘All glory comes from daring to begin.’)
<> 

அடுத்தவர்

அனுபவத்திலிருந்து
அறிந்து கொள்கிற
அளவுக்கு
அறிவுடையோர்
ஆருமுண்டோ?’
- Voltaire
(‘Is there anyone so wise as to learn by
the experience of others?’)
<> 

சரியான வார்த்தைக்கும்

கிட்டத்தட்ட
சரியான வார்த்தைக்கும்
உள்ள வித்தியாசம்
மின்னலுக்கும்
மின்மினிப் பூச்சிக்கும்
உள்ள வித்தியாசம்தான்.
-Mark Twain
 (‘The difference between the right word and the almost
right word is the difference between lightning and a lightning bug.’)
<> 

ஆற்றல்,

தன்னால் முடிவதை செய்கிறது.

அறிவாற்றல்,
தான் செய்யவேண்டியதை செய்கிறது.
- Edward Bulwer-Lytton
(‘Talent does what it can; genius does what it must.’)
<> 

அன்பின்

அரவணைப்பில்
அனைவரும்
ஆகிவிடுகிறார்கள்
கவிஞர்களாக!
- Plato
(‘At the touch of love everyone becomes a poet.’)
<> 

என் வாழ்க்கை நிறைவானது

அப்படி இல்லாத பொழுதுகளிலும் கூட.
- Ellen DeGeneres
(‘My life is perfect even when it’s not.’)
<> 

ஆகாயம்,

கண்களின் தினசரி
ஆகாரம்.
-Emerson
(‘The sky is the daily bread of the eyes.’)
 <<<<>>>>

(படம்- நன்றி:கூகிள்)

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமும் ஆகாரமும் மிகவும் அருமை...

ராஜி said...


‘எல்லாப் பெருமையும்,

துணிந்து தொடங்குவதில்

தோன்றுகிறது
>>
முதல் வார்த்தையே முத்தான் வார்த்தை

இராஜராஜேஸ்வரி said...

மின்னலுக்கும்
மின்மினிப் பூச்சிக்கும்
உள்ள வித்தியாசம்தான்.’
மிகவும் அதிகம் ...!

இராஜராஜேஸ்வரி said...

கண்களின் தினசரி
ஆகாரம்.....
ஆஹா...!
ஆகாயம் ...!!

இராஜராஜேஸ்வரி said...

கண்களின் தினசரி
ஆகாரம்.....
ஆஹா...!
ஆகாயம் ...!!

sury siva said...

Beauty is Truth and Truth Beauty,
That's all ye knew on earth,
And all ye need to know
...keats.
subbu thatha.

தி.தமிழ் இளங்கோ said...

‘All glory comes from daring to begin.’ - Eugene F. Ware

வாழ்க்கையில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இந்த சோதனை முயற்சியிலிருந்தே தொடங்குகிறது. பகிர்வுக்கு நன்றி!

ராமலக்ஷ்மி said...

/மின்னலுக்கும்
மின்மினிப் பூச்சிக்கும்
உள்ள வித்தியாசம்தான்./

அழகு. அனைத்தும் நன்று. கடைசி இரண்டும் மிகப் பிடித்தன.

கோமதி அரசு said...

ஆகாயம்,

கண்களின் தினசரி
ஆகாரம்.//
மிக அருமை.
உண்மை.

தினம் ஆகாயம் தரும் ஆகாரம் அத்தனை ருசி.

Anonymous said...

நல்லதா நாலு வார்த்தை கேட்டு எத்தனை நாளாயிற்று ?
படிக்க படிக்க மகிழ்ச்சி ஊற்று பொங்குகிறது.
பகிர்விற்கு நன்றி !

வை.கோபாலகிருஷ்ணன் said...

//‘சரியான வார்த்தைக்கும்

கிட்டத்தட்ட
சரியான வார்த்தைக்கும்
உள்ள வித்தியாசம்
மின்னலுக்கும்
மின்மினிப் பூச்சிக்கும்
உள்ள வித்தியாசம்தான்.’//

சூப்பர். பாராட்டுக்கள்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!