Wednesday, July 10, 2013

வீட்டுக்குள் வீடு


அன்புடன் ஒரு நிமிடம் 39

ப்ப எனக்கு மாத சம்பளம் போடறதாயிருக்கே கிஷோர்? ஒரு ஐயாயிரமாவது போட்டுக் கொடு.

எதுக்கு மாமா?”

உங்க சின்ன சின்ன பிரசினைகளை எல்லாம் தீர்த்து வைக்கறதுக்குத்தான்! என்றார் ராகவ்.

, புகார்ப் பட்டியல் நீட்டிவிட்டாளா யாழினி?”

ஒண்ணே ஒண்ணு!

என்ன அந்த ஒண்ணு?”

 “ஒண்ணுமில்லே, அஞ்சரை மணிக்கு ஆபீஸ் வேலை முடிஞ்சாலும் நீ வீட்டிலேயே இருக்கிறதில்லேங்கிறது அவள் குற்றச்சாட்டு!

அவ அபாண்டமா பொய் சொல்றா மாமா! நம்பாதீங்க.

அப்ப நீ என்ன சொல்றே?.

சொல்றதென்ன? நீங்களே வந்து பாருங்க. அஞ்சே முக்காலுக்கு நான் வீட்டில் ஆஜர். அப்புறம் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகர்றதே இல்லை.

அப்படீங்கறே?”

ஆமா. எப்ப வேணா எப்படி வேணா செக் பண்ணிக்கலாம் நீங்க!

ஆல்ரைட். நான் கன்ஃபர்ம் பண்ணி விட்டுப் பேசறேன்.

அடுத்தவாரம் ஆரம்பித்தார்.  திங்கள்கிழமை மாலை சரியாக ஆறு மணிக்கு லேண்ட் லைனில் கூப்பிட்டார்.

வந்துட்டேன் மாமா. பத்து நிமிஷம் ஆச்சு. காபி சாப்பிட்டுட்டு இப்பதான் நெட்ல உட்கார்ந்தேனாக்கும். ஓகே தானே?”

சரிப்பா.

செவ்வாய்க் கிழமை ஏழு மணிக்கு அழைத்தார். அவனே எடுத்தான்.

ஆஜர்.

எப்ப வந்தே? என்ன பண்றே?”

சொன்னான். அதே அஞ்சே முக்கால். ஃபிரண்ட் திலீப் வந்தான், பேசிட்டிருக்கேன். யாழினி இதோ காபி எடுத்து வந்திட்டிருக்கா. கூப்பிடவா? அவளையே கேட்கிறீங்களா?”

புதன் எட்டு மணிக்கு ஒரு திடீர் விசிட் அடித்தார். வீட்டில்தான் இருந்தான் ஸ்டார் மூவீஸ் சேனலில் ஆங்கிலப் படம் பார்த்துக் கொண்டு.

வியாழன் ஒன்பதே காலுக்கு... ஒரு சிறுகதை எழுதிட்டிருக்கேன், எழுதினவரை படிக்கிறேன், கேட்கிறீங்களா மாமா?”

வெள்ளி ஏழரைக்கும். உள்ளேதான் இருக்கிறாங்க, அப்பவே வந்துட்டார் மாமா. செல்போனில் யார்கிட்டேயோ பேசிக்கொண்டிருக்கிறார்,” என்றாள் கதவைத் திறந்த யாழினி.

பத்து நாளாக நினைத்தபோது போன், திடீர் விசிட் என்று மாற்றி மாற்றி பரீட்சித்த போதும் பையன் வீட்டிலேயேதான் அகப்பட்டான்.

தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டியதுதான் மாமா நீங்க. என்று சிரித்தான் அடுத்து அவரை சந்தித்த போது. யாழினிக்கு புத்தி சொல்லுங்க. எனக்கு நம்பிக்கையில்லை கேட்பாள்னு!

ஆமா, புத்தி சொல்ல வேண்டியதுதான்! என்றார். உனக்கு!

எனக்கு ஏன்?” அவள் சொன்னது அல்லவா தவறு என்று கேட்டது அவன் புருவம்.

அவள் சரியாய்த்தான் சொல்லியிருக்கிறாள்.

அதெப்படி? நான் அஞ்சரைக்கே வீட்டுக்கு வந்துவிடறதை நீங்களே பல முறை கண்பர்ம் பண்ணிட்டீங்களே?”

வீட்டுக்கு வந்து விடுகிறாய். ஆனால் யாழினியைப் பொறுத்தவரை நீ வீட்டுக்குள் வரவில்லை.

என்ன சொல்றீங்க?”

புரியலையா?  வீட்டுக்குள் நீ உன் உலகம் என்று ஒன்றை கட்டிக்கொண்டு அதனுள் அல்லவா இருக்கிறாய்? வரும் நண்பனுடன் அரட்டை அடித்துக் கொண்டோ டிவியில் ஆங்கிலப் படம் பார்த்துக் கொண்டோ செல்போனில் பேசிக்கொண்டோ இண்டர்நெட்டில் மூழ்கியோ கவிதை எழுதிக் கொண்டோ இருப்பதை எப்படி வீட்டில் இருப்பதாய் சொல்கிறாய்? அவளோடு நேரம் செலவிடுவதாய் நினைக்கிறாய்?”

அவனிடமிருந்து பதிலில்லை.

யோசிக்கிறே, அது போதும்! என்றார்.  
('அமுதம்' ஏப்ரல் 2013 இதழில் வெளியானது)

<<<>>>
(படம்- நன்றி: கூகிள்)

11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//
“புரியலையா? வீட்டுக்குள் நீ உன் உலகம் என்று ஒன்றை கட்டிக்கொண்டு அதனுள் அல்லவா இருக்கிறாய்? வரும் நண்பனுடன் அரட்டை அடித்துக் கொண்டோ டிவியில் ஆங்கிலப் படம் பார்த்துக் கொண்டோ செல்போனில் பேசிக்கொண்டோ இண்டர்நெட்டில் மூழ்கியோ கவிதை எழுதிக் கொண்டோ இருப்பதை எப்படி வீட்டில் இருப்பதாய் சொல்கிறாய்? அவளோடு நேரம் செலவிடுவதாய் நினைக்கிறாய்?”//

அருமை. மிகவும் உண்மையும் கூட. இன்று இது எல்லோருடைய வீட்டிலும் நடக்கும் எதார்த்தமான விஷயம் தான். பகிர்வுக்கு நன்றிகள்.

sathishsangkavi.blogspot.com said...

நல்ல கதை... மிக ரசித்தேன்..

ADHI VENKAT said...

கடைசி வரிகள் மிகவும் சரியானவை. மாமா கரெக்டாத் தான் சொல்லியுள்ளார். இப்படி ஒருவர் எல்லோர் வீட்டிலும் இருந்தால் பிரச்சனை என்ற பேச்சுக்கே இடமில்லை...:)

இராஜராஜேஸ்வரி said...

வீட்டுக்குள் நீ உன் உலகம் என்று ஒன்றை கட்டிக்கொண்டு அதனுள் அல்லவா இருக்கிறாய்?

யோசிக்கவைக்கும் அருமையான கதை..!

வெங்கட் நாகராஜ் said...

சரியாத்தான் சொல்லி இருக்கார்.....

புரிந்து கொள்ள வேண்டும் இப்படி இருப்பவர்கள்!

Rekha raghavan said...

நீங்க நல்லா யோசிச்சு எழுதி எல்லோரையும் யோசிக்க வச்சுட்டீங்க! அருமை.

Yaathoramani.blogspot.com said...

ஆமாம் உடலால் மட்டும் இருத்தல்
இருப்பில்லைதான்
ஆழமான அர்த்தம் கொண்ட அருமையான பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வைத்த கதை... வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...


மிக நல்ல கதை. காலத்துக்கு அவசியமானதும்.

Ranjani Narayanan said...

மாமாவின் 'நச்' அறிவுரை பலருக்கும் தேவை. வீட்டில் இருந்து என்ன பயன்? மனம் எங்கோ வெளியில் இருக்கும்போது?

பலபேர் வீடுகளில் இப்படித்தான் நடக்கிறது. சரியான நேரத்தில் வந்த சரியான கதை!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!