அன்புடன் ஒரு நிமிடம் - 26.
அழைப்பு மணி விடாது ஒலிக்க அபிஜித்
ஓடிச்சென்று கதவைத் திறந்தான்.
முகமே
சொல்லிற்று வந்தவர் தாங்கொணா ஆத்திரத்தில் உழல்கிறார் என்பதை. தாத்தா எழுந்து ஹாலுக்கு வந்தார் அவரை வரவேற்று உட்கார
வைக்க. அபிஜித் உள்ளே சென்று அம்மாவிடம் தெரிவிக்க அவள் டீ தயாரிக்க ஆரம்பித்தாள்.
வந்தது
தாத்தாவின் பால்ய நண்பர் சொக்கலிங்கம்.
“உடனே ஒரு முடிவு எடுத்தாகணும்!” என்றார் எடுத்த எடுப்பிலேயே. “என்ன வார்த்தை பேசிட்டான்!”
சாத்வீகன்
ஒன்றும் சொல்லவில்லை.
கொஞ்ச
நேரம் அவரைப் பேச விட்டபின் தெரிந்தது அவருக்குத் தன் பிஸினஸ் பார்ட்னருடனான
சர்ச்சை என்று. கம்பெனியைத் தேடிவந்த ஏதோ ஒரு ஆர்டரை இவர் எடுக்கத் தயங்கிவிட்டார்
என்று அவர்...
“,,,,நான் என் உழைப்பை தண்ணியா சிந்தலேன்னா
வளர்ந்திருக்குமா கம்பெனி இத்தனை உயரத்துக்குன்னு சொல்றான். அப்ப நான்? அன்னிக்கு நான் என் பணத்தை வாரி
இறைக்கலேன்னா மட்டும்?”
பொரிந்து தள்ளினார்.
அதற்குள்
டீ வரவே, “நல்ல சூடா வந்திருக்கு. டீயை
சாப்பிடு!” என்றார் தாத்தா. வாயில் ஒரு மிடறு
விட்ட அவர் “இனிப்பு கம்மியா இருக்கே?” என்று சொல்ல உள்ளிருந்து
அம்மாவின் குரல்: “இதோ
சுகர் எடுத்திட்டு வர்றேன்!”
அவர்
தன் சீறலைத் தொடர்ந்தார். “இத்தனை வருஷமா எத்தனை ஆர்டர் உறுதி பண்ணியிருக்கேன்? எனக்குத் தெரியாதாக்கும்?. இன்னும் இருக்கு எனக்குக்
கேக்கிறதுக்கு நிறைய! கேக்கத்தான் போறேன், இன்னிக்கே!...”
“இதை அப்படிப் பார்க்கக் கூடாது.
அவனும் ஒரு தொழில் அக்கறையில் சொல்றதுன்னு தான் இதையெல்லாம் எடுத்துக்கணும்.!” என்று சாந்தப்படுத்த முயன்றார்
சாத்வீகன். அவரோ இன்னும் ஆக்ரோஷமாகவே
இருந்தார். டீக்கு சர்க்கரை வந்தா என்றும் பார்க்கவில்லை.
இன்னும்
கொஞ்ச நேரம் குமுறல் நீடித்தது.
“டீ கொஞ்சம் ஆறி விட்டது பார், குடி சீக்கிரம்!”
எடுத்துக்
குடித்தார் அவர்,
“இனிப்பு சரியாயிருக்குதா?”
“ஆமா. இப்ப சரியா இருக்கு. அதான் சுகர்
சேர்த்திட்டாங்களே?”
என்றார்.
“சேர்த்திட்டாங்களா? நான் இப்பதானே வர்றேன்?” அப்போது தான் அம்மா கையில்
ஸ்பூனில் சுகருடன் வந்து நிற்க, அவர் விழித்தார். மறுபடி ஒரு மிடறு அருந்திவிட்டு, “சரியா இருக்கே இனிப்பு. நிஜமாவே நீ
இப்பதான் சர்க்கரை கொண்டு வர்றியா? அப்புறம் எப்படி?”
“காரணம் நான் சொல்றேன்,” என்றார் தாத்தா. “டீ ரொம்ப சூடாக இருக்கும்போது
இனிப்பு சற்றுக் குறைவாய்த்தான் தெரியும். நானே பலமுறை பார்த்திருக்கேன்.”
சொக்கலிங்கம்
சற்றே அதிசயமாகப் பார்த்தார்.
“எப்ப டேஸ்ட் பண்றோம்கிறதைப்
பொறுத்து சுவைகூட மாறித்தான் போகுது!” என்றார் சாத்வீகன், “சூடா இருக்கும்போது தவறாய்த்தான் தெரியுது இல்லையா?”
அவரிடம்
ஒரு மௌனம். தாத்தா எதைச் சொல்கிறார்?
டீயை
அருந்தினார் சொக்கலிங்கம்..
“அதுவும் சரிதான்!” என்று எழுந்து கொண்டார்.
எதுவும்
சரிதான் என்று சாத்வீகன் கேட்கவேயில்லை.
('அமுதம்' நவம்பர் 2012 இதழில் வெளியானது)
(படம்: நன்றி: கூகிள் )
(படம்: நன்றி: கூகிள் )
10 comments:
நிதானம் பிரதானம்...
சூடாய் இருக்கும்போது இனிப்பு குறைவாய்த்தான் இருக்கும்...
எப்ப டேஸ்ட் பண்றோம்கிறதைப் பொறுத்து சுவைகூட மாறித்தான் போகுது!” என்றார் சாத்வீகன், “சூடா இருக்கும்போது தவறாய்த்தான் தெரியுது இல்லையா?//
கோபமாய் இருக்கும் போது எடுக்கும் முடிவு சரியாக இருக்காது என்பதற்கு கதை மூலம் அருமையாக கூறிவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.
/“சூடா இருக்கும்போது தவறாய்த்தான் தெரியுது இல்லையா?”/
அருமை. நல்ல கதை.
எப்ப டேஸ்ட் பண்றோம்கிறதைப் பொறுத்து சுவைகூட மாறித்தான் போகுது!” என்றார் சாத்வீகன், “சூடா இருக்கும்போது தவறாய்த்தான் தெரியுது இல்லையா?”
மனம் சூடாய் இருந்தால் சுவை மாறும் ..
அன்பு தடவினால் சுவை கூடும் ..
ஆறிடுச்சு இப்போ.. மிக அழகாய்.
அருமையான கருத்து. சூடா இருந்தால் இனிப்பு தெரியாது...
சுவைத்தேன்.
ரேகா ராகவன்.
//“எப்ப டேஸ்ட் பண்றோம்கிறதைப் பொறுத்து சுவைகூட மாறித்தான் போகுது!” என்றார் சாத்வீகன், “சூடா இருக்கும்போது தவறாய்த்தான் தெரியுது இல்லையா?”//
மிக அருமையான சொல்லாடல். பாராட்டுக்கள். ;)))))
//('அமுதம்' நவம்பர் 2012 இதழில் வெளியானது)//
வாழ்த்துகள்.
நேரத்தைப்பொறுத்து சுவையும் மாறுமோ..!
சூடாக இருக்கும் போதும் கோபத்தில் இருக்கும் போதும் குறைந்த சுவை ....
சற்று ஆறிய பிறகும் , நிதானத்திலும்
நிறைந்து விடுகிறதே சுவை ...
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!