Monday, February 11, 2013

முதல் உதவி...


அன்புடன் ஒரு நிமிடம் - 25

முதல் உதவி...

வரையே கேளுங்கள்,” என்று சொல்லிப் போய்விட்டாள் யாழினி. என்ன நடந்தது? மூட் அவுட் ஆன மாதிரி இருக்கிறானே கிஷோர்?” என்று கேட்ட மாமாவிடம்.

புருவத்தை அவன் பக்கம் உயர்த்தினார் ராகவ். சொல்ல ஆரம்பித்தான் கிஷோர். எல்லாம் அந்தப் பையனால!

யாரு?”

அதான் எங்க வீட்டுக்கு பேப்பர் போடறான் இல்லியா அவன்!

ஓ அவனா? எங்க ஏரியா கூட அவன்தான். என்ன பண்ணினான்?”

பின்னே என்ன மாமா? சின்னப் பையன், அவனுக்கு இத்தனை அலட்சியமா? எவ்வளவு தைரியம் இருந்தால்? காலையில குளிச்சு நீட்டா டிரஸ் பண்ணிட்டு ஆபீஸ் கிளம்பறேன். என் மேலே வந்து மோதி சே! சட்டையெல்லாம் பாழ்! மழையில நனைஞ்சிட்டு மேலே சேறாக்கிட்டு வந்திருக்கான்! அதை அப்படியே என் மேல அப்பிட்டான்! வந்துது பாருங்க ஒரு கோபம் எனக்கு! அவனை உண்டு இல்லேன்னு பண்ணிட்டேன். வாய்க்கு வந்தபடி திட்டிட்டேன்!

த்சொ! த்சொ! அப்புறம்?”

மறுபடி சட்டை மாற்றி லேட்டா ஆபீஸ் போய்... இன்னிக்கு பூரா மூட் அவுட் நானு!! என்றவன் தொடர்ந்து அவனைத் திட்டிக் கொண்டே இருந்தான்.

கூல் டௌன்! அதான் நல்ல திட்டிட்டே இல்லே, விட்டுத் தள்ளு! ஆமா, அவன் பேர் என்ன சொன்னே

யாருக்குத் தெரியும்?”

அவனை ஆசுவாசப் படுத்தினார்கள் இருவருமாக.

மறுநாள்... மாமாவைத் தேடிக்கொண்டு வந்தான் கிஷோர்.

நாளைக்கு சாயங்காலம் ஷார்ப்பா ஐந்து மணிக்கு ஹோட்டல் பார்க் வந்திடுங்க. அன்னிக்கே சொன்னேனே?. எங்க வெடிங் அனிவர்சரி பார்ட்டி. மறந்துடாதீங்க.

நாளைக்கா? ஐயோ என்னால முடியாதே?”

ஏன் மாமா?”

ஒரு முக்கியமான விஷயம். வரதனை அழைச்சிட்டு அந்த கம்பெனி எம்.டியைப் பார்க்கணும்.

யார் அது வரதன்?”

ஒரு நாலு வருஷமாத் தெரியும். அப்பா வெச்சுட்டுப் போனதெல்லாம் கடன்தான். அம்மா நோயாளி. ரெண்டு தங்கைங்க. இவன்தான் படிக்க வெச்சு கரையேத்தணும். பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டிருந்தவன் படிப்பை நிறுத்திட்டு பாவம் கிடைச்ச வேலையை எல்லாம் செய்திட்டு குடும்பத்தை பராமரிக்கிறான், தினம் தினம் போராடி!
அப்பப்ப ஏதாச்சும் கடன் கொடுத்து உதவுவேன். வேண்டாம்னுதான் சொல்லுவான். இப்ப கூட அவனை எனக்குத் தெரிஞ்ச கம்பெனியில் அறிமுகப்படுத்தி வைக்கத்தான் நாளைக்கு அப்பாயிண்ட்மெண்ட் போட்டிருக்கேன், ஏதாச்சும் அசிஸ்டண்ட் வேலை வந்தா கூப்பிடற மாதிரி...

எத்தனை துயரமான பரிதாபமான வாழ்க்கை! அதில் எப்படியோ எதிர் நீச்சல் போட்டு... கிஷோர் நெகிழ்ந்து போனதில் ஆச்சரியமில்லை. அவனுக்கு உள்ளம் பரபரத்தது.

பாவம் மாமா! நானும் ஏதாச்சும் உதவணுமே அவனுக்கு!.

உதவறதெல்லாம் இருக்கட்டும், அவனைக் கஷ்டப் படுத்தாமல் இருந்தால் போதாதா? ஏதோ தெரியாமல் தவறிழைத்து விட்டால் மன்னித்தால் போதாதா?”

என்ன மாமா அப்படி சொல்றீங்க?”

அவன்தான் ரெண்டு வருஷமா உன் வீட்டில பேப்பர் போடற பையன். காலையில நீ ஏகத்துக்குத் திட்டினியே அந்தப் பையன்!
<<>>
('அமுதம்' நவம்பர் 2012 இதழில் வெளியானது)

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கிஷோர் திருந்தினால் சரி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதை நல்லாயிருக்கு. ;)

இராஜராஜேஸ்வரி said...

“உதவறதெல்லாம் இருக்கட்டும், அவனைக் கஷ்டப் படுத்தாமல் இருந்தால் போதாதா? ஏதோ தெரியாமல் தவறிழைத்து விட்டால் மன்னித்தால் போதாதா?”

சிறப்பான கதை ..பாராட்டுக்கள்...

ADHI VENKAT said...

நல்லதொரு செய்தியை சொன்ன கதை. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு தான் போலிருக்கு..

கோமதி அரசு said...

உதவறதெல்லாம் இருக்கட்டும், அவனைக் கஷ்டப் படுத்தாமல் இருந்தால் போதாதா? ஏதோ தெரியாமல் தவறிழைத்து விட்டால் மன்னித்தால் போதாதா?”//

ஆம். நீங்கள் சொல்வது உண்மை. மன்னிக்க தெரிந்தால் போதும், கதை அருமை.

மன்னிக்க தெரிந்த மனிதனின் இதயம் மாணிக்க கோவில் அப்பா! பாட்டு நினைவுக்கு வருகிறது.

Radha rani said...

அருமையான படைப்பு ...

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

(http://blogintamil.blogspot.in/2013/02/4.html)

இராஜராஜேஸ்வரி said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

'உழைப்பு உயர்வு தரும்' -நல்லக் க(ருத்தான க)தை.

kankaatchi.blogspot.com said...

சிறுகதையானாலும்
சிந்தனையை
கிளரும் கதை

பிறரின் சோகம்தான்
சில மனிதர்களின்
இதய கிணற்றில்
இரக்க ஊற்றை
சுரக்க வைக்கிறது

ஆனால் சுயநலம் என்னும்
சாக்கடை நிறைந்துவிட்ட
மனிதர்களின் இதயகிணறு
இறுகிப்போய் பாறையாக கிடப்பதால்
அதில் அழுக்காறும்
அகந்தை போன்ற கழிவு நீர் தேங்கி
அவர்கள் வாயை திறந்தால்
துர்நாற்றம் வீசுகிறது.

அதை அறியாது அவர்கள்
எதிரே வருபவர்களை பார்த்து
உங்கள் வாய் நாற்றமடிக்கிறது
என்று கூச்சல் போடுகிறார்கள்.

விபத்துக்கள்
எதிர்பாராமல் நடப்பவை

விபத்தினால்
உயிர் போனவர்கள் ஏராளம்

ஆனால் விபத்தில் சிக்கியும்
எந்தவிதமான பாதிப்பில்லாமலும்
வெளிவந்தவர்களும் உண்டு.

ஒரு சிறிய விபத்து
பலருடைய வாழ்க்கை பாதையையே
மாற்றியது உண்டு

சிறு தவற்றிற்காக கோபப்படுபவர்கள்
பெரும் தவற்றை கண்டு
வாய் மூடி மெளனமாக இருப்பார்கள்

காரணம் சூழ்நிலைகளின் கைதி

சிலர் கோபப்படவேண்டியவர்கள் மீது
கோபப்பட இயலாது
அதை வீட்டில் உள்ள
அப்பாவி மனைவியிடமும்
குழந்தைகளிடமும் காட்டி திரிவார்கள்.

சிலர் தனக்கு ஏற்ப்பட்ட
அனுபவங்களை பிறருக்கு
ஏற்பட்டதாக எழுதி கோபத்தை
தீர்த்துகொள்ளுவார்கள்.

சில இயக்குனார்கள்
திரைப்படமாக, தொலைகாட்சி தொடராக
எடுத்து பல ஆண்டுகள்
மக்களை மாக்களாக்குவார்கள்

சிலர் அதனாலென்ன
பரவாயில்லை என்று
சென்று விடுபவர்கள் உண்டு

சிலர் தனக்கு அடிபட்டாலும்
அதை கருத்தில் கொள்ளாது
மற்றவர்களின் நலனில்
அக்கறை செலுத்தும்
புண்ணிய பிறவிகளும் உண்டு.

ஆனால் இன்று இதுபோன்ற
பிறவிகள் கோடியில்
ஒருவர்தான் இருக்கிறார்கள்

இன்று சகிப்புத்தன்மையே
போய்விட்டது.

சகித்துகொள்பவன்
துன்பகுழியை விட்டு
வெளிவரமுடியவில்லை

சகித்துக்கொள்ளாதவனோ
பிறருக்கு தொடர்ந்து துன்பம்
தருவதையே இன்பமாக கொள்கிறான்.

அதனால் அவன் மன அமைதியும்
கெடுவதை அவன் உணருவதில்லை
.
அதனால்தான் என்னவோ
அன்று கண்ணதாசன் எழுதி
வைத்தான் ஒரு பாட்டு

கடலில் விழுந்த ஒருவனுக்கு
கை கொடுத்தேன் கரையேற

கரைக்கு அவனும் வந்துவிட்டான்

கடலில் நான்தான்
விழுந்துவிட்டேன் என்று.

உதவி செய்ய போகிறவர்களின்
கதி இப்படிதான்
ஆகிவிட்டது இந்நாளில்

அதனால்தான்
இக்காலத்தில் உதவ மனம் இருந்தும்
ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு
ஒதுங்கி ஓடிவிடுகிறது
இந்த உலகம்

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!