அன்புடன் ஒரு நிமிடம் - 14
உன் இடம்... அவன் இடம்...
“உலகத்தில் ரொம்ப மலிவாய்க் கிடைக்கிற
விஷயம் எது தெரியுமா?”
கிஷோரிடம் கேட்டுக் கொண்டிருந்தார் ராகவ்.
“ஆலோசனை தான் மாமா!” என்றான் அவன். “அதான் எங்கே போனாலும்
மலிவாய், ஏன், இலவசமாய்க் கூட... கூடை கூடையாய்!”
அப்போது உள்ளே நுழைந்தான் விச்சு. அவரின் தம்பி மகன்.
“வாடா விச்சு,
உன்னைத்தான் எதிர்பார்த்தேன்,”
வரவேற்றார் ராகவ். “ஒரு முக்கியமான விஷயம் கேள்விப்பட்டேனே? அது...”
“வாஸ்தவம்தான்!” தலையை ஆட்டினான், “நான் வேலையை விட்டிடலாம்னு இருக்கேன். சொந்தமா ஒரு
பிஸினஸ் செய்ய உத்தேசம்.”
கேட்ட கிஷோர் முகத்தில் ஆச்சரியம் வழிந்தது. “என்ன விச்சு
இத்தனை வருஷம் வேலை பார்த்து நல்ல செட்டிலாகின பிறகு இப்படி திடீர்னு?”
“கொஞ்ச நாளாவே யோசனைதான். வேலை சலிச்சுப் போச்சு. கையில
கொஞ்சம் சேவிங்ஸ் இருக்கு. அதை வெச்சு எங்க வீட்டு முன்னாடியே ஒரு புக் ஷாப் தொடங்கி
நடத்தலாமேன்னு நினைக்கிறேன்.”
கொஞ்சமும் தயங்காமல் கிஷோர் அவன் கையைப் பிடித்து
குலுக்கினான். “கோ அஹெட் விச்சு! நல்ல சென்டர் உங்க ஏரியா.
பிய்ச்சுக்கும் வியாபாரம். அப்பப்ப உன் மனைவியும் வந்து கவனிச்சுக்கலாம் கடையை...”
என்று ஆரம்பித்து அவன் திட்டத்தை ஆதரித்து ஒரு சின்ன லெக்சர் கொடுத்த பின்னரே
ஓய்ந்தான்.
“தாங்க்ஸ், கிஷோர்...
பெரியப்பா, நீங்க என்ன
சொல்றீங்க?”
“நான் சொல்றது இருக்கட்டும், இப்ப உன் திட்டத்துக்கு நம்ம கிஷோர் அவன் மனசில் உதித்த ஐடியாக்களை சொன்னான்
இல்லையா, அதைப்பத்தி நீ
என்ன நினைக்கிறே? Will they be of use to you?”
“Of course, they will be.” என்று புன்னகைத்தான். ‘அவன்
மனசில் இருக்கிறதை அப்படியே சொல்லிட்டான், இது மாதிரி மனமார்ந்த ஆலோசனைதான் எனக்கு தேவை.”
கிஷோர் பக்கம் திரும்பினார். “நான் வெல் டன் சொல்லலாமா கிஷோர்? நீ அதை யோசித்து உன் மனசில் கிடைத்த பதிலை
சொல்லிட்டேதானே?”
“பின்னே?”
தலையை ஆட்டினான் அவனும்.
“இப்ப நான் சொல்றதை அப்படியே சிந்திச்சு உனக்குத் தோணற
பதிலை சொல்லணும். இதே மாதிரி உன் வேலையில் சலிப்பு உண்டாகி ஒரு பிஸினஸ் பண்ணலாம்னு
மனசில் விருப்பம் எழுந்தால் நீ எப்படி யோசித்து என்ன முடிவு எடுப்பே?”
“அதாவது அவன் இடத்தில் நான் இருந்தால்?” சரி என்று சிரித்தபடியே யோசிக்க ஆரம்பித்தான்.
இரண்டாவது நிமிடமே அவன் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது.
குழப்ப ரேகைகள்.
“நிச்சயமா நீ முதலில் சொன்னதை இப்ப சொல்ல மாட்டேன்னு
தெரியுது.”
மீண்டும் புன்னகை உதட்டில் தவழ. “யெஸ். என்னதான் சலிப்பா
இருந்தாலும் சுளையா மாதம் முப்பதாயிரம் போல வர்றதைப் போய், ஒரு குடும்பம் நடத்தற நாம விடலாமான்னு ஒரு கேள்வி கிளம்புது....
பர்சேஸ்க்காக சென்னை, மும்பைன்னு
அலையறப்போ நம்பிக்கையா ஸ்டோரை விட்டிட்டுப் போக இந்தக் காலத்தில் முடியுமாங்கிறது
அடுத்த கேள்வி. அப்புறம்... நம்ம ஊரில கடன் கொடுத்தாத்தான் வியாபாரம் நடக்கும், கொடுத்துட்டு அப்புறம் அவங்க பின்னாடி அலைய
முடியுமான்னு வேறொரு கேள்வி முளைக்குது… ஆஹா, கொஞ்சம் அந்த இடத்தில் மானசீகமா அமர்ந்து கற்பனை
செய்ய செய்ய சுவாரஸ்யமான புதிர் மாதிரி பதில் கிடைச்சுட்டே இருக்குது.”
“இது! இதுதான் நான் சொல்ல வந்தது. அந்த இடத்தில் நம்மை
வைத்து பார்த்து சில நிமிடம் யோசித்துவிட்டு அட்வைஸ் கொடுக்க ஆரம்பித்தால்...”
“…they will certainly be of use.”
என்றான் விச்சு.
“for both,”
என்று முடித்தான் கிஷோர், “அந்த மாதிரி யோசித்து பழக்கும்போது அத்தனைக்கத்தனை நாம் எடுக்கும்
முடிவுகளும் நல்லா அமையுமில்லையா?”
('அமுதம்' ஜூலை 2012 இதழ்)
<<<>>>
12 comments:
//அந்த மாதிரி யோசித்து பழக்கும்போது அத்தனைக்கத்தனை நாம் எடுக்கும் முடிவுகளும் நல்லா அமையுமில்லையா?”//
நிச்சயம் நல்ல முடிவாகவே அமையும் என்பதில் எள்ளளவு சந்தேகமுமில்லை. வித்தியாசமாக யோசித்திருப்பதற்கு பாராட்டுகள்.
நலல் பயனுள்ள அறிவுரை
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
ஆஹா இது நல்லா இருக்கே.
//அந்த இடத்தில் நம்மை வைத்து பார்த்து சில நிமிடம் யோசித்துவிட்டு அட்வைஸ் கொடுக்க ஆரம்பித்தால்...”
“…they will be certainly of use.” //
ஆலோசனை அளிக்க நினைப்பவர்களுக்கு நல்லதொரு ஆலோசனையைக் கூறியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.
அன்புடன்
vgk
அமுதத்தில் வெளிவந்துள்ள அமுதமாகிய சுய முன்னேற்றக் கட்டுரைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
நம்மிடம் உண்மையாக ஆலோசனை கேட்கும் பிறருக்கு, நாம் அதில் உள்ள அனைத்து விஷயங்களையும், அனைத்துக்கோணங்களிலும் ஆராய்ந்து, நம்மை நாமே அவர்கள் இடத்தினில் பொருத்திப்பார்த்து, நல்லதொரு ஆலோசனை கூறுவது தான் எப்போதுமே நல்லது.
உண்மையான நட்புக்கு அதுவே அடையாளமாகும்.
அருமையானதோர் விஷயத்தை எளிமையாகச் சொல்லியுள்ளது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ;))
vgk
// என்னதான் சலிப்பா இருந்தாலும் சுளையா மாதம் முப்பதாயிரம் போல வர்றதைப் போய், ஒரு குடும்பம் நடத்தற நாம விடலாமா .... …. …. நம்ம ஊரில கடன் கொடுத்தாத்தான் வியாபாரம் நடக்கும், கொடுத்துட்டு அப்புறம் அவங்க பின்னாடி அலைய முடியுமா... //
புதிதாக தொழில் தொடங்கும் முன்னர் கட்டாயம் யோசிக்க வேண்டிய கேள்விகள்.
அந்த இடத்தில் நம்மை வைத்து பார்த்து சில நிமிடம் யோசித்துவிட்டு அட்வைஸ் கொடுக்க ஆரம்பித்தால்...”
“…they will certainly be of use.”
எளிமையாய் சொன்ன அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
மாற்றி யோசி என்பது இது தானா!
அருமையான சிந்தனை.
சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.
அறிவுரை சொல்லும் போது யோசிக்க வேண்டியது தான்.
அதுக்கென்ன.. செய் என்று சொல்லிவிட்டு அது அவர்கள் பாடு என்று ஒதுங்கி விடலாம்.. அப்ப்டி இல்லாமல் அந்த நிலையில் நம்மை வைத்து ஆத்மார்த்தமாய் யோசனை சொல்வதே பழகின நட்புக்கு செய்யும் மரியாதை.. அழகாய் சொல்லிவிட்டீர்கள்.
நல்ல சிந்தனை. காசா பணமா என்று பலரும் யோசிக்காமல் அறிவுரைகளை அளுளி வீசுவார்கள். நட்டம் அவர்களுக்கில்லையே?
நல்லதொரு கட்டுரை...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...
(இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி விட்கேட் வேலை செய்யவில்லை... சரியாகும் வரை நிறுத்தி வைக்கவும்... (Edit html and Remove Indli Widget) தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)
முத்துக்குளிக்க முடிவு செய்துவிட்டு
முதுகுலே தண்ணீர் படுமே என்று
முட்டாக்கு போட்டுக்கொண்டு படுப்பவன்
முன்னேற இயலுமா என்ன ?
கடை நிலை ஊழியனாகச் சேர்ந்து இடை நிலை ஊழியனாக வளர்ந்து, முதிர் நிலை ஊழியனாக ஓய்வு
பெற்று அவ்வப்போது அலுவலக வாசலில் போராட்டங்கள் நடத்தி அவ்வப்பொழுது கிடைக்கும்
பஞ்சப்படி உயர்விலே நம் பஞ்சம் தீரும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் தான் நம் உலகிலே
தொண்ணூறு விழுக்காடுக்கும் மேலே.
இருந்தாலும், ப்ராக்டிகல் ஸைட் ஆஃப் லைஃப் ஐ பிரதிபலித்து இருக்கிறீர்கள்.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. அட்வைஸ் பிரமாதம்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
என்னும் வள்ளுவனின் வாக்கும் ஏற்புடையதே.
சுப்பு ரத்தினம்.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!