Saturday, May 12, 2012

அதற்குள்...




பேச வேண்டிய ஒன்றிரண்டு
முக்கியமான போன் கால்களை
பேசிமுடித்து விடலாம்.
ஓடிச்சென்று குக்கரில்
ஒரு டம்ளர் அரிசியை
போட்டு வைத்து விடலாம்.
பையன் தன்னுடைய அறையில் 
படிக்கிறானா தூங்குகிறானா, 
எட்டிப் பார்த்து விடலாம்.
சர்க்கரையோ காபியோ
சட்டென்று பக்கத்து கடையில்
வாங்கி வந்து விடலாம்.
'சிறிய இடைவேளை'யே
வாழ்க நீ!

<<<>>

10 comments:

Rekha raghavan said...

அதற்குள் உங்கள் கவிதையை படித்து கமெண்ட் மற்றும் ஒட்டு போட்டாச்சு! வாழ்க அந்த சிறிய இடைவேளை

Mahi said...

:)

டைட்டிலையும், டிவி படத்தையும் பார்த்ததுமே எதைப் பற்றிய கவிதை என்று புரிந்துவிட்டது! நல்லாருக்குங்க கவிதை!

தி.தமிழ் இளங்கோ said...

சின்னத்திரை தொடர் மயக்கத்தில் , சிக்கிய மகளிர் செயல்களை எடுத்துச் சொல்லும் கவிதை!

ராமலக்ஷ்மி said...

இந்த இடைவேளைக்குள்தான் எத்தனை பெரிய வேலைகளை முடித்து விடலாம்:))! மிக அருமை.

vimalanperali said...

அனுபவக் கவிதை.இதுதான் வாழ்க்கையில் உறக்கிற யாதார்த்தம்,இடைவெளிகளில் நிறந்து தெரிகிற வாழ்க்கை.நல்ல பதிவு,வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிறிய சிறிய இடைவேளையே, மிகப்பெரிய சந்தோஷத்தைத் தரும் தருணங்கள், அன்னையற்கு!

நல்லதொரு படைப்பு. பாராட்டுக்கள்.

குறையொன்றுமில்லை. said...

கவிதை இதைப்பற்றியது தான் என்று ஈசியா புரிஞ்சுக்க முடிஞ்சுது

rajamelaiyur said...

அந்த சின்ன இடைவேளையில் தான் பாதி வீட்டில் சாப்பாடே கிடைக்குது

rajamelaiyur said...

இன்று


யார் தெய்வம் ?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சின்ன இடைவேளையில் தான் இருக்கு பெரிய சந்தோஷமே! முதலில் சீரியலின் நடுவில் வரும் அட்வர்டைஸ்மெண்ட் இடைவெளி பயன் படும். இப்போது அட்வர்டைஸ்மெண்ட்கள் தான் நன்றாக இருக்கின்றன!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!