மனம் தெளிந்திருப்பதைப் போல
தெளிந்திருக்கிறது ஆகாயம் சில நேரம்
மனம் பூத்திருப்பதைப் போல
பூத்திருக்கிறது மரம் சில நேரம்
மனம் குளிர்ந்திருப்பதைப் போல
குளிர்ந்திருக்கிறது அருவி நீர் சில நேரம்
மரத்தையும் ஆகாயத்தையும்
அருவி நீரையும் பார்த்து
மனம் உரம் பெறுகிறது பல நேரம்.
<><><>
12 comments:
மிக நல்ல கருத்தினைக் கொண்ட கவிதை...
இயற்கையை பார்த்து நமது சிந்தனைக்கும் ஒரு நல்ல உரம் கிடைக்கத்தான் செய்கிறது....
அருமை ;)
இயற்கை மன உரத்தை விட்டுவிட்டு செயற்கை மன உரத்தைத் தேடி சீரழிகிறோம். படிப்பினையுள்ள கவிதை.
இயற்கையுடன் இணைந்த வாழ்க்கைதான் நம்முடையது என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
எப்போதும் உவமைகள் வெளியில் தோன்றி உள்ளத்துள் உறையும். இக்கவிதையில் உள்ளத்து உணர்வுகளோடு ஒப்பிடப்படுகிறது உரத்துக்கான உவமைகள். இயற்கை அளிக்கும் உரம் நன்று. உரத்தால் விளைந்த கவிதையும் வெகுநன்று. பாராட்டுகள்.
இடைவிடா முயற்சியுடன்
தன் நிலையை தக்கவைத்துக்கொள்ளும்
இயற்கையிடமிருந்து நாம்
கற்றுக் கொள்ளவேண்டும்.
நல்ல கவிதை நண்பரே.
அருமையான கவிதை.
மிக அருமை.
Excellent Jana.
Tight schedule. sorry jana. I will send my book very soon.
The comment is mine jana. Harani (Anbalagan gomathi)
தங்களுக்கு ஒரு விருது காத்துள்ளது.
பெற்றுக்கொள்ள தயவுசெய்து வருகை தாருங்கள்.
http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_11.html
அன்புடன் vgk
உங்களுக்கு என் இன்றைய பதிவில் விருதினை அளித்துள்ளேன். வந்து பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்!
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!