Wednesday, April 13, 2011

கும்பிடப்போன தெய்வம்...



குஷி தாங்கவில்லை ராஜுவுக்கு.

அவனுடைய அபிமான நடிகை அஜந்தாஸ்ரீ தங்கள் ஊருக்கு ஒரு நாள் ஷூட்டிங்குக்காக வருகிறாள் என்று அறிந்ததுமே எப்ப வரும், எப்ப வரும் என்று காத்திருந்த அந்தப் பத்தாம் தேதியும் வந்தது.

''என்னடா ராஜு, இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை, உனக்குக் காலேஜ் இல்லை தானே? என்னோட துணையா கோயிலுக்குக் கொஞ்சம் வாயேன். பக்கத்து ஊர் கோயிலிலே இன்னிக்கு விசேஷம்.'' - அம்மா கேட்டாள்.

''போம்மா நீ வேறே! எனக்கு அர்ஜண்டா ஒரு வேலை இருக்கு,'' என்று மறுத்து விட்டு காலையிலேயே கிளம்பி விட்டான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு.

டப்பிடிப்பு ஆரம்பமாகியிருந்தது. 'சே, இந்த அம்மா வேறே பேசிப் பேசி அரை மணி நேரம் வேஸ்ட் பண்ணிட்டாங்க.' சலித்துக் கொண்டே தன் அபிமான நடிகையை தேடினான்.

அஜந்தாஸ்ரீயைக் கானோம்.

டைரக்டர் யாரிடமோ சண்டை போட்டுக் கொண்டிருந்தார். மெல்ல ஒரு அசிஸ்டன்ட் டைரக்டரை அணுகி விசாரித்தான். ''ஹீரோயின் எங்கே?''

''ரெண்டு மணி நேரம் பர்மிஷன் கேட்டாங்க. டைரக்டர் முடியாது இன்னிக்கு நிறைய ஷாட்ஸ் இருக்குன்னார். கெஞ்சி பர்மிஷன் வாங்கிட்டுப் போயிட்டாங்க!''

''அப்படியா, எங்கே?''

''பக்கத்து ஊர் கோயிலிலே ஏதோ விசேஷமாமே?''


(குமுதம் 06-09-2006 இதழில் வெளியானது)

17 comments:

Chitra said...

(குமுதம் 06-09-2006 இதழில் வெளியானது)


...Super!


சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தும், ராஜுவுக்குப் பார்க்கக்கொடுத்து வைக்கவில்லை.

ஆனால் ராஜுவின் அம்மா ஒருவேளை பார்த்திருப்பார்கள்.

நல்ல அருமையான குட்டிக்கதை.

குமுதத்தில் பிரசுரம் ஆனதற்கும் சேர்த்து பாராட்டுக்கள். அன்புடன் vgk

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை. “தாய்ச் சொல்லைத் தட்டாதே” என்று சொன்னால் யார் கேட்கிறார்கள்?

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Rekha raghavan said...

நடிகர் நடிகைகளும் நம்மைப்போன்றவர்களே, அவர்களுக்கும் ஆசாபாசங்கள் உண்டு என்பதை தெளிவாக உணர்த்திய கதை. அருமை.

குமரி எஸ். நீலகண்டன் said...

நல்ல கதை. தொடரட்டும் இடுகைகள்

CS. Mohan Kumar said...

சுவாரஸ்யம் !!

குறையொன்றுமில்லை. said...

நல்ல கதை, தொடருங்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தாய் சொல்லை தட்டக் கூடாது என்கிற நீதியை உணர்த்திய சிறு கதை!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இடம் என்ன, மங்களூர் கத்ரி (கோபால் நாத் ஊர்) போல இருக்கிறது?

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நச்சுன்னு ஒரு குட்டிக் கதை. குமுதத்தில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.

கே. பி. ஜனா... said...

நன்றி Chitra,
நன்றி வை.கோபால கிருஷ்ணன்,
நன்றி வெங்கட் நாகராஜ்,
நன்றி நீலகண்டன்,
நன்றி மோகன் குமார்,
நன்றி ரேகா ராகவன்,
நன்றி Lakshmi,
நன்றி ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி,
நன்றி வித்யா சுப்பிரமணியம்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

I'm a big fan of "oru pakka kadhaigal" in Kumudham... nice write up... thank you...

ரிஷபன் said...

நல்ல ட்விஸ்ட்

RVS said...

இப்படி இரண்டு பாராக் கதைகள் என்னால் எழுதவே முடியாது. இருபது வரிகளில் துவக்கம் கொடுத்து, ட்விஸ்ட் வைப்பது அசகாய செயல். அற்புதம் சார்! ;-)

ADHI VENKAT said...

சூப்பராயிருந்தது சார். குமுதத்தில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.

கே. பி. ஜனா... said...

நன்றி அப்பாவி தங்க மணி!
நன்றி ரிஷபன்!
நன்றி கோவை 2 தில்லி
நன்றி RVS!

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃ''பக்கத்து ஊர் கோயிலிலே ஏதோ விசேஷமாமே?''ஃஃஃஃ

அருமை அருமை...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!