Saturday, May 7, 2011

மடிப்புகள்


ணவன் துணிகளுக்கு இஸ்திரி போடுவதை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டேயிருந்தாள் ராஜி.

எத்தனையோ பையன்களின் யூனிஃபார்ம் சட்டைகளை அயன் பண்ணித் தருகிற கணவனின் பெட்டியால் தங்கள் மகனின் யூனிஃபார்ம் சட்டையையும் ஒரு நாள் அயன் பண்ணி அதை அவன் ஜம்மென்று போட்டுக்கொண்டு போகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எப்பவும் போல பீறிட்டெழுந்தது.

ஆனால் ராமசாமிக்கு அதற்கெல்லாம் நேரமிருக்காது. எதிர் ஃபிளாட்களின் மொத்தத் துணிகளும் காலையிலேயே வந்து குவிந்து விடும்.

இன்றைக்கு எப்படியாவது விசுவின் சட்டையை அயன் பண்ண வைத்து விடணும் என்று தீர்மானித்தாள் ராஜி.

வசரம் அவசரமாக இஸ்திரி போட்டுக் கொண்டிருந்த ராமசாமி, ''கடவுளே, போச்சு!'' என்று கத்தினான்.

''என்னங்க ஆச்சு?''உள்ளிருந்து ஓடிவந்தாள் ராஜி.

''பெட்டி முனை கீறி சட்டை கிழிஞ்சிட்டது. அடடா, இது அந்த டி த்ரீ ஃ பிளாட் கோவிந்தனோடது ஆச்சே! லேசில் விடமாட்டாரே?''

''கவலைப் படாதீங்கப்பா!'' என்றொரு குரல் கேட்டது. விசு.

''இது என் சட்டைதாம்பா. எப்படியோ அந்தத் துணிகளோடு சேர்ந்து விட்டிருக்கு!''

''அப்பாடா!'' பெருமூச்சு விட்டான் ராமசாமி. ''வேறே சட்டை போட்டுக்கடா. சாயந்தரம் அம்மா தைச்சுத் தந்துடுவா.''

காலையில் துணிகளோடு துணியாய் பையனின் சட்டையையும் செருகி வைத்திருந்த ராஜி, தன் கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.


( 'குமுதம்' 07-02-2005 இதழில் வெளியானது )

11 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை சார். பகிர்வுக்கு நன்றி.

Rekha raghavan said...

ஏழைகளின் ஏக்கங்களை நுணுக்கத்துடன் சொல்லப்பட்ட விதம் அருமை.

CS. Mohan Kumar said...

ரொம்ப சோகமாவும் பாவமாவும் இருக்கு சார்

வை.கோபாலகிருஷ்ணன் said...

மடிப்புகள் கதை வெகு அருமை.
ஏழ்மையின் ஏக்க நிலையும் அந்த மடிப்புக்களில் ஒளிந்துள்ள ஒரு கறையாகத்தெரிகிறது.
குமுதத்தில் வெளியீடு நடைபெற்றதற்கு என் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
அன்புடன்
vgk







Voted 3 to 4 in INDLI

ராமலக்ஷ்மி said...

உருக்கம்.

நல்ல கதை.

பகிர்வுக்கு நன்றி.

ரிஷபன் said...

பாவம் அவள்.

Chitra said...

feeling sad. :-(

சண்முககுமார் said...

தங்கள் பதிவை இணைக்க புதிய தளம்
இணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்

http://tamilthirati.corank.com

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகான வாழ்வியல் கதை... நன்றி

இராஜராஜேஸ்வரி said...

காலையில் துணிகளோடு துணியாய் பையனின் சட்டையையும் செருகி வைத்திருந்த ராஜி, தன் கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.//
பாவம்....

ADHI VENKAT said...

நல்ல கதை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!