Tuesday, August 3, 2010

முன்னால் ஒரு வார்த்தை


''ன்னடா பெண்டாட்டி கிட்டே நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டவன் மாதிரி இருக்கே?''
கேட்ட மதுவிடம், ''அதாண்டா நடந்தது!'' என்றான் பரசு.

''என்ன ஆச்சு?''

''ஒண்ணுமில்லே, பூச்செடி வாங்கித் தந்தேன். அதை சரியா நட்டுவைக்கத் தெரியாம எல்லாம் வீணாப் போச்சு. 'இந்தச் சின்ன விஷயம் கூடத் தெரியலியே?'ன்னு சொன்னேன். அவ்வளவுதான், 'எப்ப பார்த்தாலும் எனக்கு இதுகூடத் தெரியலே, அதுகூடத் தெரியலேன்னு தானே சொல்றீங்க'ன்னு திட்டிட்டு அவங்கம்மா வீட்டுக்குப் போயிட்டா!'' என்றான் சோகத்துடன்.

''அட, இதே வாக்கியத்தைத்தான் நானும் இன்னிக்குக் காலையிலே என் மனைவிகிட்டே சொன்னேன். ஆனா நோ ப்ராப்ளம்.''

''உன் பெண்டாட்டி அப்படி.''

''இல்லே, நான் சொன்ன விதம் அப்படி! ஒரு சின்ன வித்தியாசம் தான். அப்படி சொல்றதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை சேர்த்தேன்.''
''என்ன அது?''
''அட, என்னென்னவோ பெரிய விஷயம் எல்லாம் அழகாச் செய்யறியே? இது ஒரு சின்ன விஷயம். இது தெரியலியான்னேன்!''

''புரிஞ்சது. இனி எனக்கும் பிரச்னை வராது.''

(குமுதம் 17-09-2008 இதழில் வெளியானது)

9 comments:

R.Gopi said...

ஆஹா....

என்னன்னவோ பெரிய கதைகள் எல்லாம் படிச்சிருக்கேன்... ஆனா, அவை தராத மகிழ்ச்சி, இந்த சின்ன கதை தந்தது என்றால் அது மிகையல்ல....

நீங்க சிறுகதை / குறுகதை / ஒரு பக்க கதை எழுதுவதில் “மேதை” தான்.....

Rekha raghavan said...

"மாத்தி யோசி"-ங்கறது இதுதானோ? கச்சிதமான அருமையான கதை.

ரேகா ராகவன்.

ரிஷபன் said...

//இது ஒரு சின்ன விஷயம். இது தெரியலியான்னேன்//
ஒரு சின்ன வித்தியாசம்.. ஒரு பக்கக் கதை எழுதுவதில் கூட நீங்கள் காட்டுவதுதான் உங்கள் பலம்.

Chitra said...

ஹையோ...... அழகாய் சொல்லி விட்டீர்கள்..... ரசித்தேன்.

Sweatha Sanjana said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

சி.பி.செந்தில்குமார் said...

ஒரு பக்க கதையைக்கூட ஒரு பக்கா கதையாக்கித்தான் படைபீங்களோ

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

என்னங்க...உங்களோட ஒரு பக்க கதை எல்லாமே ஒரு ‘பக்கா’ கதையா இருக்கு?

priyamudanprabu said...

சரியா சொன்னிங்க
சில வார்த்தைகள் நாம் சொல்ல வந்த கருத்தை விழுங்கிவிடும் , பேசும் விதம் மிக முக்கியம்

இடைவெளிகள் said...

குமுதத்தில் வெளிவந்த உங்கள் எல்லா கதைகளுமே எனக்கு மனப்பாடமே ஆகியிருக்கிறது, அந்த வகையில் இதுவும் ஒன்று. சிறுகதை சிறுதாயினும் சிந்தனை பெரிது.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!