Sunday, July 18, 2010

ஆனால் நானோ...

ன்பை நான் பார்த்தேன்,
அன்பு என்னைப் பார்க்கவில்லை.
பாசத்தை நான் பார்த்தேன்,
பாசம் என்னைப் பார்க்கவில்லை.
வாழ்க்கையை நான் பார்க்கிறேன்,
வாழ்க்கை என்னைப் பார்க்காத போதும்!


தரவில்லை, ஆனாலும் கண்களில் ஒளி!
அடுத்த வேளை சோறில்லை,
ஆனாலும் முகத்தில் நம்பிக்கை!

''இல்லீங்க,
அவங்க சிரிக்கச் சொன்னாங்க
போட்டோவுக்கு!''

7 comments:

ரிஷபன் said...

இரு கவிதைகளுமே மனதைத் தொட்டன..
முதல் கவிதை அப்படியே முகத்தில் அறைந்தது.
இரண்டாவது சிரிப்பு பூத்து அப்படியே உறைந்தது!

பத்மா said...

முதல் படம் மிகவும் அழகு
அதற்குரிய வரிகளும் ..

CS. Mohan Kumar said...

சார் ஏன் தமிழிஷில் இணைக்கலை? உங்கள் சார்பாக நான் இணைத்து விட்டேன்

Anonymous said...

சாட்டையடி ரெண்டாவது கவிதை...

பனித்துளி சங்கர் said...

முதல் கவிதை எதிர்பார்ப்பு கலந்த ஏக்கத்தை காட்டுகிறது . இரண்டாவது கவிதை கண்ணீர் மறைக்கும் புன்னைகையின் அழுகையை சொல்கிறது . இரண்டும் அருமை . பகிர்வுக்கு நன்றி

இடைவெளிகள் said...

ஒரு பக்கக் கதைகளில் அசத்திவரும் தாங்கள் இப்பொழுது தரமான் கவிதைகள் தரவும் துவங்கிவிட்டீர்கள். கவிதையின் வரிகள் ஒவ்வொன்றும் யதார்த்தத்தின் பின்புலங்கள் ஏக்கங்களின் வெளிக்காட்டுதல்கள் கண்ணீரின் கவிதைகள்

priyamudanprabu said...

''இல்லீங்க,
அவங்க சிரிக்கச் சொன்னாங்க
போட்டோவுக்கு!''
//

MMM NOTHING TO TYPE

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!