சிநேகிதரும் சக தொழிலதிபருமான பாலகுமாரைப் பார்க்கச் சென்ற சபேசனுக்கு ஒரே வியப்பு.
போன வாரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது தன் உதவி .மானேஜர்களை அழைத்து, ''அந்த ராம் நகர் பிராஞ்சில் மார்கெட்டிங் ஃபிகர் ரொம்ப டவுனாகியிருக்கு, உடனே பார்த்து சரிப்படுத்துங்க!'' என்று பணித்ததைப் பார்த்திருந்தார்.
இன்று போயிருந்தபோது அவரது உதவி மானேஜர் ஒருவர் வந்து, ''சரி பண்ணிட்டோம் சார். ராம் நகர் பிராஞ்சில் 30 பர்சன்ட் ஆர்டர் அதிகரிச்சிருக்கு,'' என்று தெரிவித்தார்.
அவர் அகன்றதும் நண்பரைக் கேட்டார். ''என்னப்பா இது, உன் ஸ்டாஃப் பிரமாதம்! எனக்கும் இருக்கிறாங்களே! எந்தப் பிரசினைன்னாலும் உட்கார வெச்சு எப்படி எப்படி சரி பண்ணனும்னு லிஸ்டே போட்டுக் கொடுக்கிறேன். நடக்கலேன்னு தலையைச் சொறிஞ்சிட்டு வந்து நிக்கிறாங்க.''
''அதுதான் காரணம்!'' என்றார் பாலகுமார், ''பிரசினையைச் சரி பண்ணனும்னு சொன்னால் போதும். என்ன செய்யணும் எப்படி செய்யணும்னு அவங்களா யோசிச்சு சரி பண்ணிடுவாங்க. நாமே அப்படி செய் இப்படி செய்னு பொம்மை மாதிரி இயக்கினா செயல்பாடு ஜீரோ தான், தெரிஞ்சுக்க.''
('குமுதம்' 04-11-2009)
('குமுதம்' 04-11-2009)
15 comments:
இது கதை யல்ல ; மனதில் விதைக்க வேண்டிய விதை !!!
உண்மைதான்!! கதை நன்று.
நுணுக்கம்! - ஒரு பெரிய விஷயத்தை நுணுக்கமாய் சொல்லிய நல்ல கதை!
வெங்கட்.
நல்ல நுணுக்கமான கதை. இந்த நுணுக்கம் அதிகாரி–ஊழியர் – களுக்கு மட்டுமல்ல, பெற்றோர்-குழந்தை – களுக்கும் (ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல்) பொருந்தும் என்று நினைக்கிறேன்.
that that man that that work போல
nice
நுணுக்கத்தை நுணுக்கமாக சொல்லிய அழகான ஒரு பக்கக் கதை.
ரேகா ராகவன்.
நுணுக்கம் மனசுக்கு இணக்கம்!
அவரவர் செயல் போக்கில் விட்டு ரிசல்ட் பார்ப்பதுதான் மேலதிகாரியின் லட்சணம். அதை அழகாய் கதை சொல்லி விட்டது
''பிரசினையைச் சரி பண்ணனும்னு சொன்னால் போதும். என்ன செய்யணும் எப்படி செய்யணும்னு அவங்களா யோசிச்சு சரி பண்ணிடுவாங்க. நாமே அப்படி செய் இப்படி செய்னு பொம்மை மாதிரி இயக்கினா செயல்பாடு ஜீரோ தான், தெரிஞ்சுக்க.''
.... நச்!
ஒரு வாழ்வியல் தத்துவத்தை உள்ளடக்கிய அருமையான பதிவு. முதல் வரியைப் படித்ததும் குமுதத்தில் படித்த நினைவு சட்டென்று வந்து விழுந்தது அந்த அளவுக்கு மனதில் பதிந்துபோன கதை. பாராட்டுக்கள்
நல்ல மேலாண்மை டிப்.
ஓஹோ....
இது தான் பிஸினஸ் டெக்னிக் / வியாபார நுணுக்கம் என்பதோ....
அனைவரும் படித்து ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று...
முற்றிலும் உண்மை..
நன்றி: எம்.அப்துல் காதர்,
நன்றி: 'சைவ கொத்து பரோட்டா',
நன்றி: வெங்கட் நாகராஜ்,
நன்றி: ஈஸ்வரன்,
நன்றி: பத்மா,
நன்றி: ராகவன்,
நன்றி: ரிஷபன்,
நன்றி: சித்ரா,
நன்றி: 'இடைவெளிகள்',
நன்றி: ஆர்.கோபி,
நன்றி: சத்யராஜ்குமார்
நன்றி: முனைவர்.குணசீலன்.
இது கதையல்ல.. நிஜம்!!
A good point for the MANAGEMENT study.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!