Monday, April 5, 2021

ஆளுக்கு ஒரு கதை...

 


நடந்துவிட்ட ஒரு கொலையைப் பற்றி அதில் சம்பந்தப்பட்டவர்கள் ஆளுக்கு ஒரு கதை சொல்லும் பிரபல அகிரா குரோஸாவாவின் ‘Rashoman’ படத்தில் கொலைப்பழி ஏற்கும் வழிப்பறி கொள்ளைக்காரனாக நடித்தவரின் பர்ஃபாமன்ஸ் பேசப்பட்ட ஒன்று.

Toshiro Mifune. 1950,60 களின் மிகப் பிரபலமான ஜப்பானிய நடிகர். இன்று பிறந்த நாள்!
Empire பத்திரிகை தேர்ந்தெடுத்த Top 100 Great Actors of All Time இல் ஒருவர்.
ஹாலிவுட் படங்களிலும் நடித்தவர். ‘Grand Prix’ அதில் ஒன்று.
Premiere பத்திரிகை தேர்ந்தெடுத்த உலகின் தலைசிறந்த 100 நடிப்புகளில் ஒன்று ‘Yojimbo’ வில் இவருடையது.
குரோஸாவா தனக்கு மிகப் பிடித்த நடிகரென இவரைச் சொன்னால், தன்னுடைய பெருமைமிகு பாத்திரங்கள் எல்லாம் குரோஸாவாவின் (16) படங்களில்தான் என்கிறார் இவர்.
‘Rashoman' படம் ஜப்பானில் ஓடவில்லை. Venice Festival -க்கு அனுப்பப்பட்டது டைரக்டருக்கும் தெரியாது, இவருக்கும் தெரியாது. ஆனால் முதல் பரிசு வாங்கி வரத் தவறவில்லை.
Kurosawa -வின் பிரபல ‘Seven Samurai’ இலும் இவரே ஹீரோ. Entertainment Weekly-இன் உலகின் தலைசிறந்த 100 படங்களில் ஒன்று அது.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

தகவல்கள் நன்று.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!