Monday, December 22, 2014

வித விதமாக..



அன்புடன் ஒரு நிமிடம் - 71.
”வர வர மனுஷங்களைக் கண்டாலே ஒரே வெறுப்பா இருக்கு. யாரையுமே என்னால் டைஜெஸ்ட் பண்ண முடியலே..”. அலுத்துக் கொண்ட   நண்பர் பரந்தாமனைப் பரிவுடன் நோக்கினார் சாத்வீகன். கடைக்குப் போகிற வழியில் சந்தித்தார் அவரை. பார்த்ததுமே அவர் ஆரம்பித்து தன்னைச் சுற்றியுள்ள எல்லாரும் தன்னைப் படுத்தும் பாட்டைச் சொல்லி விசனப்பட்டார்.
“சரி, எங்கே கிளம்பி இப்படி…?” – சாத்வீகன்.
“மார்க்கெட்டுக்குத்தான்!” என்றார் அவர். “காய் வாங்கணும்.”
“நல்லதாப் போச்சு. வாங்க, நானும் அந்த வழிதான்.”
மார்க்கெட்டுக்குள் நுழைந்தார்கள். முதல் பெரிய கடை.
”பாருங்க எத்தனை… விதவிதமா காய்கறிங்க அடுக்கியிருக்கிறாங்க.”
”ஆமாமா. எல்லாம் நாம் வாங்கத்தானே?”
”நமக்கே நமக்குத்தான். ஒண்ணொண்ணா பார்ப்போம். அதோ காலிஃப்ளவர்!”
”ஆஹா இது நல்ல டேஸ்டா இருக்கும். பக்குவமா பொரிச்சா சிக்கனை மிஞ்சிரும் சுவையில.”
”அப்ப இது சுவையான ரகம்னு சொல்றீங்க..அப்ப என்ன யோசனை? வாங்கிப் போடுங்க.”
வாங்கினார்.
”இதோ நாட்டு வெண்டைக்காய்!”
”கொஞ்சம் வழ வழ.. ஆனா மெமரிக்கு நல்லதாச்சே?”
”அப்ப அதையும் வாங்கிவிட வேண்டியதுதான்..   நாம பக்குவமா பழகிக்குவோம் அதனோட..”
பக்குவமா பழகிக்குவோமா? இவர் என்ன சொல்றார்? பரந்தாமனுக்குக் குழப்பம்
”வாழைக்காய் ஃப்ரஷா இருக்கு.”
”ஐயோ அது வாயு ஆச்சே? வேணாம்.”
”அப்ப கொஞ்சம் விலகி நின்னுக்குவோம்.”
விலகி நிற்கிறதா? யோசித்தபடியே பீன்ஸை அள்ளினார். “பவர் ஃபுட் ஆக்கும் இது. ஹெல்த்துக்கு நல்லது.”
”அப்ப சினேகிக்க வேண்டியதுதான்…”
சினேகிக்க….. இவர் என்ன வெஜிடபிள்களைச் சொல்றாரா மனுஷர்களைச் சொல்றாரா?
“என்ன பார்க்கறீங்க? மனுஷங்களையும் சேர்த்துத்தான் சொல்றேன். காய்கறிக் கடையில் விதவிதமா காய் இருப்பது போலத்தான் உலகத்தில மனிதர்களும் விதவிதமாக... எல்லா காய்கறிகளையும் ஜீரணிக்க முடிவது போல எல்லா மனிதர்களையும் ஜீரணிக்க முடியும்.”
வியப்புடன் பார்க்க இவர் தொடர்ந்தார்.  ”ஒவ்வொரு காயும் ஒவ்வொரு மாதிரி. பிடித்தவற்றை விரும்பி வாங்குகிறோம். பிடிக்காத சிலதை சத்துக்காக சேர்த்துக் கொள்ளுகிறோம். சிலதை அதன் பிரத்தியேக சுவைக்காக சேர்த்துக் கொள்ள வேண்டியதாகிறது.  இங்கே நாம என்ன பண்றோம்? ஒவ்வொரு காயையும் தனித்தனியா பார்க்கிறோம். ஒன்று போல ஒன்றில்லைன்னு நல்லாவே தெரிந்துகொண்டு!.  இதனுடைய இயற்கை இது, அதனுடைய மாறாத தன்மை அதுன்னு புரிந்து ஏத்துக்கறோம்.  மனுஷர்களையும் அதேபோலப் பார்த்து ஏற்றுகொள்ள முடியும்.  நன்மை இருக்குன்னு நினைக்கிறப்ப கசக்கிற பாவைக்காயையும் வாங்கிக்கறோம் இல்லையா? இப்படியே சில கசப்பான மனிதர்களையும் ஏற்றுக்கொள்ள முடியும். முயற்சி செய்து பாருங்களேன்.  It may work.

It will,“ என்றார் பரந்தாமன் திருப்தி முகத்தில் பிரதிபலிக்க.
(”அமுதம்’ மார்ச் 2014 இதழில் வெளியானது)
><><><

11 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையான ஒப்பீடு
அற்புதமான படைப்பு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

ப.கந்தசாமி said...

நல்ல உவமானம்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே
கசப்பான மனிதர்களையும் ஏற்றுக் கொள்வோம்

திண்டுக்கல் தனபாலன் said...

= சரி தான்...

ராமலக்ஷ்மி said...

/உலகத்தில மனிதர்களும் விதவிதமாக... எல்லா காய்கறிகளையும் ஜீரணிக்க முடிவது போல எல்லா மனிதர்களையும் ஜீரணிக்க முடியும்./

உண்மைதான். ஜீரணிக்கவே முடியாவிட்டாலும் கூட ஜெலுசில் உதவியோடு ஜீரணிக்கப் பழகிக் கொள்ள வேண்டியதாகிறது :). வாழ்க்கை தத்துவத்தை அழகாகக் சொல்லியுள்ளீர்கள்.

Rekha raghavan said...

காய்கறிகளுடன் வாழ்க்கையை ஒப்பீடு செய்துள்ளது அழகு.

கோமதி அரசு said...

எளிமையாக காய்கறிகள் மூலம் வாழ்க்கை பாடத்தை போதித்து விட்டார் சாதவீகன் அவர்கள்.

ரிஷபன் said...

எளிதில் ஜீரணமாகிற எழுத்து !

வெங்கட் நாகராஜ் said...

அன்றாட வாழ்விலிருந்து ஒரு அற்புத ஒப்பீடு!

த.ம. +1

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒவ்வொரு காயையும் தனித்தனியா பார்க்கிறோம். ஒன்று போல ஒன்றில்லைன்னு நல்லாவே தெரிந்துகொண்டு!. இதனுடைய இயற்கை இது, அதனுடைய மாறாத தன்மை அதுன்னு புரிந்து ஏத்துக்கறோம். மனுஷர்களையும் அதேபோலப் பார்த்து ஏற்றுகொள்ள முடியும். நன்மை இருக்குன்னு நினைக்கிறப்ப கசக்கிற பாவைக்காயையும் வாங்கிக்கறோம் இல்லையா? இப்படியே சில கசப்பான மனிதர்களையும் ஏற்றுக்கொள்ள முடியும். முயற்சி செய்து பாருங்களேன்.//

மிக அருமையான உதாரணம். உண்மையும் கூட. பகிர்வுக்கு நன்றிகள்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!