Sunday, November 23, 2014

நல்லதா நாலு வார்த்தை... - 39


‘மிருதுவும் நடுநிலையும்
மிகத் தொலைவு வரும்.’
- Cervantes
(‘Fair and softly goes far.’)
<>

’உங்கள் தனித்திறமை என்பது 
கடவுள் உங்களுக்களித்த பரிசு
அதைக் கொண்டு என்ன செய்கிறீர்கள் என்பது 
கடவுளுக்கு நீங்கள் திரும்ப அளிக்கும் பரிசு.’
- Leo Buscaglia
(‘Your talent is God’s gift to you. What you do
with it is your gift back to God.’)

<>

‘அனேக முறை வருத்தப்பட்டிருக்கிறேன்
பேசிவிட்டேனே என்று,
ஒரு போதும் இல்லை 
மௌனமாயிருந்ததற்காக.’
- Publilius Syrus
(‘I often regret that I have spoken;
never that I have been silent.’)
<>

‘நான் யார் இல்லையோ 
அதற்காக நேசிக்கப்படுவதைவிட
நான் யாரோ அதற்காக 
வெறுக்கப்படுவது பரவாயில்லை.’
- Kurt Cobain
(‘I’d rather be hated for who I am,
than loved for who I am not.’)
<>

‘ஒரு வருட சம்பாஷணையில் 
ஒருவரைப் பற்றித் தெரிந்துகொள்ள 
முடிவதை விட
ஒரு மணி நேர விளையாட்டில் 
அதிகம் தெரிந்துகொள்ள முடியும்.’
- Plato
(‘You can discover more about a person in
an hour of play than in a year of conversation.’)
<>

’நம்மைப்பற்றிப் பேசும் 
பத்துப் பேரில் ஒன்பது பேர் 
மோசமாக எதையோ பேசுகிறார்கள்
நல்லதாக எதையோ பேசும் ஒருவரும் 
அதை பல நேரம் 
மோசமாகப் பேசுகிறார்.’
- Rivarol
(‘Out of ten people who talk about us, nine says
something bad, and often the one person who
says something good says it badly.’)
<>

’குழந்தைப் பருவத்தைக் 
கூடவே எடுத்துச் சென்றால்
ஒருபோதும் வயதாவதில்லை.’
- Tom Stoppard
(‘If you carry your childhood with you,
you never become older.’)

><><><
(படம்- நன்றி:கூகிள்)

9 comments:

இராஜராஜேஸ்வரி said...

குழந்தைப் பருவத்தைக்
கூடவே எடுத்துச் சென்றால்
ஒருபோதும் வயதாவதில்லை

உண்மதான்.

கரந்தை ஜெயக்குமார் said...

//குழந்தைப் பருவத்தைக்
கூடவே எடுத்துச் சென்றால்
ஒருபோதும் வயதாவதில்லை.’///
ஆகா இது மட்டும் நடந்துவிட்டால்
எவ்வளவு நன்றாக இருக்கும்

கரந்தை ஜெயக்குமார் said...

தம2

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
சிந்திக்க தூண்டும்வரிகள் பகிர்வுக்கு நன்றி த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

மௌனமாயிருந்ததற்காக - பல தடவை...!

http://dindiguldhanabalan.blogspot.com/2014/11/Gandhi.html

ராமலக்ஷ்மி said...

பொன்மொழிகளும் தமிழாக்கமும் மிகச் சிறப்பு. நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தாங்கள் தெரிவு செய்த பொன்மொழிகளுக்கு சிகரம் வைத்தாற் போன்று அமைந்துள்ளது மொழிபெயர்ப்பு. நான்கு நூல்களை மொழிபெயர்த்தவன் என்ற நிலையில் இவற்றை நான் மிகவும் அதிகமாக ரசித்தேன். பாராட்டுகள்.

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com.au/2014/11/blog-post_26.html?s
வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

மொழியாக்கங்கள் அருமை.

//’குழந்தைப் பருவத்தைக் கூடவே எடுத்துச் சென்றால் ஒருபோதும் வயதாவதில்லை.’//

இனிமை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!