Wednesday, September 3, 2014

அவள் - 7


37
ன்றேனும் ஓர் நாள்
நீ
என் முகம் பார்க்கக்கூடும்
ஏராளம் கவிதைகளை
விலக்கிகொண்டு!
<>
38
சேர்த்துக் கொள்வதற்கில்லை
உன் மீது
கவிதை பாடாத நாட்களை
என் வாழ் நாளுடன்.
<>
39
ன் அனுமதியின்றி
வெகு நேரமாக
உன்னுடன்
பேசிக்கொண்டிருக்கிறேன்
என் கனவில்.
<>
40
ட்டிப் பார்த்தேன் வெளியே
நீ நடந்து போய்க் கொண்டிருந்தாய்
உன் பின்னே நானும்.
போவதைப் பார்த்தேன்.
<>
41
ங்கேயும் நான்
வழி தவறிச் சென்றுவிடாதபடி
கூடவே
உன் நினைவுகள்.
<>
42
றுப்பு வெள்ளையாக
இருந்த என்
கனவுகள்
கலரில் தெரிய ஆரம்பித்தது
உன்னை சந்தித்ததிலிருந்து.
<>
43
ருபத்தி நாலு மணி நேரத்தில்
இருபத்து மூன்று மணி
உன்னைப் பற்றியே
எண்ணுகிறேன்…
ஒரு மணி நேரம்
உன் மீது கவிதை
எழுதுகிறேன்.
><><><><
(படம்- நன்றி:கூகிள்)

7 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

காதல் சுவைததும்பும் கவிதை மிக அருமையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி
த.ம 2வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அனைத்தும் அருமை என்றாலும் 40,42,43 மிகவே ரசித்தேன்

வெங்கட் நாகராஜ் said...

அவள் பற்றிய அனைத்து கவிதைகளும் ரசித்தேன். குறிப்பாய் - 38 மற்றும் 41.

இராஜராஜேஸ்வரி said...

இயற்கை அழகி..!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உன் அனுமதியின்றி
வெகு நேரமாக
உன்னுடன்
பேசிக்கொண்டிருக்கிறேன்
என் கனவில்.//

அழகான இயற்கையான இன்பமான இதமான வரிகள். :)

ராமலக்ஷ்மி said...

வாழ்க அன்பு. அனைத்தும் ரசிக்க வைத்தன.

கரந்தை ஜெயக்குமார் said...

ரசித்தேன் நண்பரே நன்றி

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!