Friday, September 5, 2014

முதலில் ஒன்று...


அன்புடன் ஒரு நிமிடம் - 64.

"இதை என்னால் டைஜெஸ்ட் பண்ண முடியலே..." என்றான் குமரன் மனக் குமுறலுடன். 

"ஏன் நல்லா வேக வைத்திருக்கிறாங்கதானே பூரியை?"
என்றார் சாத்வீகன்.

"இதை இல்லைங்க, என்னைச் சுத்தி நடக்கிறதை சொல்றேன்." என்றான் அவன், சாத்வீகனின் நண்பர் மகன். இருவரும் இருந்தது ஓர் உணவகத்தில்.

"என்னோட வேலை பார்க்கிற ரமேஷை எடுத்துக்குங்க.ஒவ்வொரு  பிரமோஷனும் சரியான நேரத்தில அவன் மடியில் வந்து விழுது. கிடுகிடுன்னு மேலேறி இப்ப எனக்கே மானேஜராயிட்டான். எனக்கானால் ஓரோர் பிரசினை வந்து இன்னும் அப்படியே இருக்கேன். என் கிளாஸ் மேட்  கோபாலன் பாருங்க, சாதாரண வேலைதான் அவனுக்கு. ஆனா பசங்க நல்லா படிச்சு எஞ்சினீயர் டாக்டர்னு ஆகி இப்ப அவன் சௌக்கியமா யு எஸ்ல செட்டிலாயிட்டான். எனக்கு பாருங்க, ரெண்டு பசங்களும் டிகிரி முடிக்கவே தடுமாறி...  பொண்ணு கல்யாணம் சரியா இன்னும் அமையாமல் அதில திணறிட்டிருக்கேன். ஏன,்  பக்கத்து வீட்டு பரமசிவம்? சின்னதா ஸ்பேர் பார்ட்ஸ் கடை , அதும் என்கிட்டே கொஞ்சம் கடனும் வாங்கி ஆரம்பிச்சான். இன்னிக்கு மில்லியனேர். மூணு பொண்ணுங்களையும் பெரிய இடத்தில கட்டிக் கொடுத்து... நான் என்னடான்னா... என்ன எழுந்திட்டீங்க?"

"சாப்பிட்டுட்டோமில்லே? அப்ப பில்லை கொடுக்க வேணாமா? அதான! ் எழுந்திரு. காபி இங்கே வேணாம.் பக்கத்து காண்டீன்ல பிரமாதமா இருக்கும்."

பில்லைக் கொடுத்தார்கள்.

கான்டீனுக்குள் அவர்கள் நுழைய குமரன் நின்று பர்சை எடுத்தார். "இங்கே முதல்ல டோக்கன் எடுக்கணும் இல்லையா?" எடுத்தார். 

காபியை அருந்திய படியே தொடர்ந்தார் குமரன்.  "இவங்க மூணு பேருக்கும் எல்லா விஷயங்களுமே லாபமாகவும் சாதகமாவும் நடந்துட்டு வருது. எனக்கோ... பாருங்கf  நான் வாழற வாழ்க்கையை! இதுவரைக்கும் ஒரு விஷயமாவது உருப்படியா நடக்கணுமே? பசங்களுக்கு வேலை கிடைக்கலே. பொண்ணுக்கு கல்யாணம் செட் ஆகலே. பக்க வாதத்தில் விழுந்த மனைவிக்கு நாலு வருஷமா உடல் தேறலே.  எனக்கு என்ன பதில் கிடைக்கப்போகுது ஆண்டவனிடமிருந்து? உங்களால் சொல்ல முடியுமா?"

சாத்வீகன் அவரையே கூர்ந்து பார்த்தார். பிறகு நிதானமாகச் சொன்னார்.

"இத பாரு, உன் கேள்விக்கு இதிலே பதில் இருக்கான்னு எனக்குத் தெரியாது. ஆனா இதை மட்டும் சொல்றேன். அங்கெ சாப்பிட்டுவிட்டு அப்புறம் பில் கொடுத்தோம். இங்கே பில்லை முதலில் கொடுத்துவிட்டு அப்புறம் சாப்பிடறோம். வித்தியாசம் புரியுதா உனக்கு?"
ஒரு கணம் யோசித்தார். 

"புரியுது!" என்றார் உற்சாகமாக. 

(’அமுதம்’ ஜனவரி 2014 இதழில் வெளியானது.)

><><><

(படம்- நன்றி : கூகிள்)

8 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
கதை நன்றாக உள்ளது அமுதம் இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 2வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அங்கெ சாப்பிட்டுவிட்டு அப்புறம் பில் கொடுத்தோம். இங்கே பில்லை முதலில் கொடுத்துவிட்டு அப்புறம் சாப்பிடறோம். வித்தியாசம் புரியுதா உனக்கு?" ஒரு கணம் யோசித்தார். //

வெற்றியைப் புரியவைக்க மிக அருமையான வழிகாட்டல். பகிர்வுக்கு நன்றி. அமுதத்தில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

ரிஷபன் said...

வாழ்க்கையைப் பற்றிய புதிய கண்ணோட்டம்.. அருமை.

இராஜராஜேஸ்வரி said...

புரியுது!" என்று உற்சாகமாக காட்சிப்பட்ட கதைக்குப் பாராட்டுக்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

//அங்கெ சாப்பிட்டுவிட்டு அப்புறம் பில் கொடுத்தோம். இங்கே பில்லை முதலில் கொடுத்துவிட்டு அப்புறம் சாப்பிடறோம். ///
ஆகா அற்புதம் நண்பரே

வெங்கட் நாகராஜ் said...

நல்ல வழிகாட்டல்.....

ராமலக்ஷ்மி said...

மனதில் பதியும் வண்ணமாகப் புரிய வைத்த விதம் அருமை.

ADHI VENKAT said...

புதிய கண்ணோட்டம். பாராட்டுகள் சார்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!