Sunday, September 14, 2014

நல்லதா நாலு வார்த்தை... 36


நம்மைவிட 
குறைந்த புத்திகூர்மையும் 
கூடுதல் விவேகமும் 
கொண்டவரைப் போல 
எரிச்சலூட்டுபவர் இலர்.’
- Don Herold
('There is nobody so irritating as somebody 
with less intelligence and more sense than we have.')
<>

எதையும் நம்பாதவனுக்குக்கூட
தன்னை நம்ப ஓர் யுவதி
தேவைப்படுகிறாள்.’
- Eugen Rosenstock-Huessy
(‘He who believes in nothing still needs 
a girl to believe in him.’)
<>

'கலையில் மனிதன் 
வெளிப்படுத்துவது 
தன்னையே, 
பொருள்களை அல்ல.'
- Rabindranath Tagore
(‘In art, man reveals himself and 
not his objects.’)
<>

ஒவ்வொரு மனிதரின் 
ஆகச் சிறந்ததில்
நம்பிக்கை கொள்ள
நான் விரும்புகிறேன்,
அது எனக்கு அனேக 
அல்லல்களைத் தவிர்க்கும்.’
- Rudyard Kipling
(‘I always prefer to believe the best of 
everybody, it saves so much trouble.’).
<>

அளந்து பார்த்தால் வாழ்க்கை
ஆகச் சில கணங்களே.
அதில் ஒன்று இது.’
- Charlie Sheen
{‘Life all comes down to a few moments. 
This is one of them.’)
<>

'எங்கே போகிறோம் 
என்பதுனக்குத் தெரியாவிடில் 
எந்தப் பாதையும் 
கொண்டு சேர்க்கும் அங்கே!'
- Lewis Carroll
(‘If you don’t know where you are going, 
any road will get you there.’)

<><><>
(படம் - நன்றி : கூகிள்)

9 comments:

வெங்கட் நாகராஜ் said...

அருமையான பகிர்வு.....

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

சிந்தனைச்செறி மிக்க வரிகள்.!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
தத்துவ வரிகள் நன்றாக உள்ளது இரு மொழிகளில்...பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கோமதி அரசு said...

நல்லவை பகிர்வு அருமை.
நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்தும் அருமை.

//‘எதையும் நம்பாதவனுக்குக்கூட தன்னை நம்ப ஓர் யுவதி தேவைப்படுகிறாள்.’//

உண்மை :)

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான பொன்மொழிகள்! பகிர்வுக்கு நன்றி!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

http://thaenmaduratamil.blogspot.com/2014/09/blog-post_15.html

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்


தங்களுக்கு  விருது இரண்டை பகிர்ந்துள்ளேன் அதை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள்


ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இதோ விருது அள்ளிச் செல்லுங்கள்....:

-நன்றி-

-அன்புடன்-

-ரூபன்-

நிலாமகள் said...

மனதில் நின்றது 'ஒன்று'

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!