Tuesday, July 29, 2014

நல்லதா நாலு வார்த்தை... -34


'வெற்றியின் வழி நானறியேன்
ஆனால் 
வீழ்ச்சிக்கு ஒரு வழி 
அனைவரையும் திருப்திப்படுத்த 
முயற்சிப்பது.'
- Bill Cosby.
(‘I don’t know the key to success, but the key to 
failure is trying to please everybody.’)
<>

எல்லாமே கணிக்கப்பட்டு விட்டது,
எப்படி வாழ்வதென்பதைத் தவிர.’
Jean Paul Sartre
(‘Everything has been figured out, 
except how to live.’)
<>

அவரிடமே முடிவை 
விட்டு விடுபவருக்கே 
ஆண்டவன் தன் 
ஆகச் சிறந்ததை 
அளிக்கிறார்.’
-Jim Elliot
(‘God always gives His best to those 
who leave the choice with him.’)
<>

அடுத்தவர்கள் தன் மேல் 
அள்ளி எறிந்திட்ட
செங்கற்களைக் கொண்டு
அஸ்திவாரத்தை பலமாய் 
அமைப்பவனே 
வெற்றிகரமான மனிதன்.’
- David Brinkley
(‘A successful man is one who can lay a firm 
foundation with the bricks others have thrown at him.’)
<>

அது எழுத்தோ, பேச்சோ 
ஆகச் சோகமான வார்த்தைகள்
அப்படி நடந்திருக்கலாம்என்பதே.’

- John Greenleaf Whittier
(‘Of all sad words of the tongue or pen, the 
saddest are these, ’It might have been.’)
<>

நமக்கானது எல்லாம் 
நம்மிடம் வருகிறது, 
நாமதைப் பெற்றுக் கொள்ளும் 
திறனை உருவாக்கினால்.’ 
- Rabindranath Tagore
(‘Everything comes to us that belong to us 
if we create the capacity to receive it.’)
<>


இந்தக் கணத்தை நிறைவு செய்வதும்
பாதையின் ஒவ்வொரு அடியிலும் 
பயணத்தின்முடிவைக் கண்டுகொள்வதும்
ஆகச் சிறந்த வாழ்வை 
அதிக மணி நேரம் வாழ்வதுமே 
விவேகம்.’
- Emerson
(‘To finish the moment, to find the journey’s end 
in every step of the road, to live the greatest 
number of good hours, is wisdom.’)

>>><<<
(படம் - நன்றி: கூகிள்)

4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஏழுமே அருமைதான். இருப்பினும் நாலாவது நடுநாயகமாகவும் அஸ்திவாரக்கல்லாகவும் அமைந்துள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

விவேகமான வார்த்தைகள்...!

”தளிர் சுரேஷ்” said...

அருமையான பொன்மொழிகளின் தொகுப்பு! நன்றி!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை
தம 2

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!