Monday, May 19, 2014

அவள்... 2


 
அவள்...

6
எங்கோ சந்தித்த நம்
இருவர் வாழ்வின்
சில நொடிகள்
இரண்டறக் கலந்துவிட்டன
எங்கும் போகமுடியாமல்
நாம்.


7
எதிர்பார்க்கும் கண்ணில்
தெரிகிறது
என் பிம்பம்
நான்
இல்லாத போதும்.
 

8
நீ
படிக்கக் கையில்
எடுத்ததும்
என் கவிதைகள்
நாணிக் காணாமல் போயின.


9
இதயத்தைப்
பக்க அடையாளமாய்
வைக்கிறேன்
உன்னைப் பார்த்த
கணத்தின் மீது.


10.

இடம் வலம்,
மேல் கீழ்
என்று எல்லா விதத்திலும்
திருப்ப முடிந்தது
என் பார்வையை
உன்னைப் பார்ப்பது
வரையில்.

><><><

(படம்: நன்றி: கூகிள்)

6 comments:

இராஜராஜேஸ்வரி said...

அவள் அழகோ....!!??

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான கவிதைகளுக்கு
காரணமாயிருக்கும்
"அவள் "வாழ்க

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ரசிக்கவைக்கும் வரிகள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Rekha raghavan said...

அழகோ அழகு.
ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் அருமை. அதிலும் அந்த பத்தாவது ரொம்பவே ரசித்தேன்.

ராமலக்ஷ்மி said...

மிக அருமை,

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!