Tuesday, March 11, 2014

நல்லதா நாலு வார்த்தை – 27


'கடிகாரத்தைக் கவனியாதே;
அது செய்வதைச் செய்.
ஓடிக்கொண்டிரு.'
- Sam Levenson
('Don't watch the clock; do what it does.
Keep going.')
><>< 

'இறப்பு அல்ல, மிகப் பெரிய இழப்பு.
நாம் வாழும்போதே
நமக்குள் மடிந்துபோகிற ஒன்றே
ஆகப் பெரிய இழப்பு'
- NormanCousins
('Death is not the greatest loss in life. The greatest
loss is what dies inside us while we live.')
><>< 

'உவகை உறைந்திருக்கும் ஓரிடத்தை
உள்ளுக்குள் காணுங்கள், அந்த
உவகை வலியை
சுட்டெரித்துவிடும்.'
- Joseph Campbell
('Find a place inside where there's joy,
and the joy will burn out the pain.')
><>< 

'மமதை நமக்குஇருந்திராவிடில்
மற்றவரை அது இருப்பதாக
குறை சொல்லமாட்டோம்.'
-La Rochefoucauld
('If we did not have pride, we would not
complain of it in others.')
><>< 

'உலகின் மற்ற அனைவரும்
வெளியேறும்போது
உள்ளே நுழைபவரே
உண்மையான நண்பர்.'
- Walter Winchell
('A real friend is one who walks in
when the rest of the world walks out.')
><>< 

'தாகம் தோன்றுமுன்
கிணற்றைத் தோண்டுங்கள்!'
- Proverb
('Dig the well before you are thirsty.')
><>< 

'அன்பென்ற தேன்
அமைந்த பூவே வாழ்க்கை.'
- Victor Hugo
('Life is the flower for which love is the honey.')
<>+<>+<>
(படம்- நன்றி: கூகிள்)
 
 

8 comments:

ராஜி said...

கடிகாரம் சொல்லும் அறிவுரை நினைவில் கொள்ள வேண்டியதுதான். பகிர்வுக்கு நன்றி

மனோ சாமிநாதன் said...

//'இறப்பு அல்ல, மிகப் பெரிய இழப்பு.
நாம் வாழும்போதே
நமக்குள் மடிந்துபோகிற ஒன்றே
ஆகப் பெரிய இழப்பு'
- NormanCousins
('Death is not the greatest loss in life. The greatest
loss is what dies inside us while we live.')//

ஆறூமாஈயாஆணா வாஆஸாகாம்!

உண்மையிலேயே நட்பு இறப்பதும் அன்பு மரணிப்பதும் தான் நிஜமான மரணத்தை விட கொடுமையானது!

இராஜராஜேஸ்வரி said...

அத்தனை வரிகளும் தேனாய் சுவைத்து பயனும் அளிக்கும் சிறப்புடையவை..பாராட்டுக்கள்..!

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை...

முதலிரண்டும் கடைசியும் மிகவும் பிடித்தவை....

நன்றி...

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் அருமை. இரண்டாவது மிகச் சிறப்பு.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை
நண்பரே

கீத மஞ்சரி said...

அனைத்தும் அற்புத மொழிகள். தாகம் தோன்றுமுன் கிணற்றைத் தோண்டச் சொல்லும் பழமொழி அதிகம் கவர்ந்தது. பகிர்வுக்கு நன்றி ஜனா சார்.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை.... முதலில் வருவது வாழ்வில் நாம் முதலில் வர செய்ய வேண்டியது!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!